மதுரை மண்டல பி.எப்., அலுவலக குறை தீர் கூட்டம்

மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிச.,10 காலை 10:00 மணிக்கு ‘நிதி உங்கள் அருகில்’ என்ற தலைப்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தினர் வருங்கால வைப்பு நிதி சார்ந்த குறை, 
கருத்துக்களை நவ.,30க்குள் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் நேரில் அல்லது தபால் மூலம் சமர்பிக்கலாம். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வைப்பு நிதி உதவி கமிஷனர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here