வட்டார கல்வி அலுவலர்களுக்கு, புதிய முறையில் கற்பித்தல் தொடர்பான பயிற்சி கூட்டம்

ஈரோடு வட்டார கல்வி அலுவலர்களுக்கு, புதிய முறையில் கற்பித்தல் தொடர்பான பயிற்சி கூட்டம்
நடந்தது.
ஈரோடு, காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கூட்டம் நடந்தது. ஈரோடு சி.இ.ஓ., பாலமுரளி தலைமை வகித்தார். ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் கற்பித்தல், அணுகுமுறை குறித்தும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு எளிய படைப்பாற்றல், கற்பித்தல் முறை குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 14 யூனியன்களை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர், வட்டார கல்வி மேற்பார்வையாளர் உட்பட, 140 பேர் பங்கேற்றனர். பாடம் கற்பித்தல் குறித்து, தொடக்க கல்வி மாணவ, மாணவியர், 15க்கும் மேற்பட்டோரையும், கூட்டத்துக்கு வரவழைத்து, மாதிரி வகுப்பு நடத்தப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here