ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும என C.E.O உத்தரவு !!

ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்,” என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறினார்.காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் மாவட்ட அளவிலான அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்., பள்ளி முதல்வருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:6,7,8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வைக்கு செல்ல வேண்டும். காலை 9:15 முதல் மாலை 4:15 மணி வரை வகுப்பு நடத்தப்பட வேண்டும்.பள்ளி நேரத்தில் அலுவல் நிமித்தமாக ஆசிரியர்கள் வெளியே செல்ல நேர்ந்தால், ஆசிரியர் இயக்க பதிவேட்டில் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும், இவற்றை தலைமை ஆசிரியர்கள் முறையாக கடை பிடிக்க வேண்டும். அலுவலக பணியாளர் இல்லாத பள்ளிகளில் மாற்று பணியில் அலுவலக பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.நிகழ்ச்சியில் தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, திருப்பத்துார் கல்வி அலுவலர் பரமதயாளன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் முனியாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.–

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here