பள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு ‘செக்’

பள்ளிகளில் போலி சிறப்பாசிரியர்கள் யாரேனும்பணியில் சேர்ந்தார்களா என்பதை கண்டுபிடிக்க சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஓவியம், விளையாட்டு, இசை, தையல், கணினி போன்ற பயிற்சிகள் அளிக்க சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து அறிக்கை அளிக்க அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்தது.திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 463 சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். முதற்கட்டமாக பழனி, வேடசந்துார் கல்வி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி, திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி பள்ளியில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., சாந்தகுமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய 9 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். நவ.,22ல் திண்டுக்கல், வத்தலக்குண்டு கல்வி மாவட்டங்களுக்கு நடக்க இருக்கிறது.சி.இ.ஓ., கூறும்போது, ‘சிறப்பாசிரியர்களின் 10, 12 வகுப்பு மற்றும் அவர்கள் சார்ந்த துறை படிப்புகளுக்கான சான்றிதழ்களை சரி பார்க்கிறோம். அரசு கேட்டு இருக்கும் சான்றிதழ்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்கிறோம். நாங்கள் அறிக்கை அளித்த பிறகு அரசு தான் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here