வாட்ஸ்அப், வீசாட், ஸ்கைப்போன்ற OTTசேவைகளுக்குப் புதியகட்டுப்பாடுகளை விதிப்பதுதொடர்பாக திட்டமிட்டுவருகிறது ட்ராய். இதுஎதுமாதிரியானபாதிப்புகளை ஏற்படுத்தும்?

 

வாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப்புதுக் கட்டுப்பாடுகள்…ட்ராயின் முடிவு சரியா? #OTTRegulations

வாட்ஸ்அப், ஸ்கைப், ஹைக்போன்ற OTT பிளாட்ஃபார்ம்சேவைகளுக்குத்தொலைத்தொடர்புநிறுவனங்களுக்குஇருப்பதுபோலவே புதுக்கட்டுப்பாடுகள் விதிப்பதுகுறித்து ஆலோசித்துவருகிறது ட்ராய்.இதுதொடர்பாககடந்தவாரம் Consultaion Paper-ஐ வெளியிட்டிருக்கும் ட்ராய்,தற்போது நிறுவனங்களின்கருத்துகளுக்காகக்காத்திருக்கிறது.ஒருவேளை OTTபிளாட்ஃபார்ம்களுக்குப்புதிய கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டால், இன்றுநாம்பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பிலிருந்துஃபேஸ்புக் மெசஞ்சர் வரைஅனைத்து ஆப்களிலும்அதன் தாக்கம்எதிரொலிக்கும். வாட்ஸ்அப்போலவோ, ஹைக்போலவோ புதிதாக இனிஎந்தவொரு ஆப்பும்வரமுடியாத நிலைகூடவரலாம். எதற்காகஇப்படியொரு முடிவைஎடுக்கவிருக்கிறது ட்ராய்?

நெட் நியூட்ராலிட்டியில்தொடங்கிய பிரச்னை!

OTT பிளாட்ஃபார்ம்களுக்குக்கட்டுப்பாடுகள் விதிப்பதுதொடர்பான சர்ச்சைஇப்போது அல்ல; 2015-லேயே தொடங்கிவிட்டது.அந்த வருடம் முதன்முதலில்ஏர்டெல் நிறுவனமானதுஸ்கைப், வைபர் போன்றVoIP சேவைகளுக்குத் தனிக்கட்டணங்கள்நிர்ணயித்தது. அதாவதுவாடிக்கையாளர்கள்மொபைல் டேட்டா பேக்வைத்திருந்தாலும் கூட,அந்த டேட்டாவில் இந்த VoIPசேவைகளைப் பயன்படுத்தமுடியாது. மாறாக,இதற்கெனத் தனிரீசார்ஜ்தான்செய்யவேண்டும். இதற்குஅப்போது கடும் எதிர்ப்புகள்கிளம்பியது. அடுத்ததாகஅதே வருடம் பிப்ரவரிமாதம் ஃபேஸ்புக் ஆனது,இந்தியாவின்இணையவசதி இல்லாதஇடங்களில் இலவசஇணையச் சேவையைவழங்குவதற்காக Internet.orgஎனும் திட்டத்தைச்செயல்படுத்தியது. Free Basics என அழைக்கப்பட்டஇந்தத் திட்டம் மூலமாககுறிப்பிட்ட சிலஇணையதளங்கள் மட்டும்அனைவருக்கும்இலவசமாக வழங்கப்படும்.நெட் நியூட்ராலிட்டிக்குஎதிராக இருந்த இந்தத்திட்டத்தை ஒட்டுமொத்தஇந்தியாவும் எதிர்க்க,இறுதியில் இதுகைவிடப்பட்டது. இதேபோலஏர்டெல் நிறுவனமும்குறிப்பிட்ட சிலஇணையதளங்களுக்குமட்டும் முன்னுரிமை தரும்ஏர்டெல் ஜீரோ எனும்திட்டத்தை அறிவித்து,அதற்கும் எதிர்ப்புகள்கிளம்பியது. இப்படி நெட்நியூட்ராலிட்டி, ஜீரோரேட்டிங், OTTசேவைகளுக்கானகட்டுப்பாடுகள் அனைத்துப்பிரச்னைகளும் ஒருங்கேகிளம்பவே அனைத்துக்குஎதிராகவும் அடுத்தடுத்துட்ராய் புதுப்புதுவிதிமுறைகளைஉருவாக்கியது.அதைத்தொடர்ந்துகுறிப்பிட்ட சிலஇணையதளங்களுக்குமட்டும் முன்னுரிமை தரும்ஜீரோ ரேட்டிங், நெட்நியூட்ராலிட்டி ஆகியஇரண்டு பிரச்னைகளும்முடிவுக்கு வந்தன. ஆனால், OTT சேவைகளுக்கும்,டெலிகாம்நிறுவனங்களுக்கும்இடையேயான தகராறுமட்டும் தீரவில்லை.தற்போது அந்தப்பிரச்னையைத்தீர்ப்பதற்காகத்தான் இந்தப்புதிய ஆலோசனைஅறிக்கை மூலம் மீண்டும்`பஞ்சாயத்தைக்’கூட்டியிருக்கிறது ட்ராய்.சரி, இவர்களுக்குள் என்னபிரச்னை?

 

வாட்ஸ்அப்

2013-14 வரைக்கும்டெலிகாம் நிறுவனங்களின்வருமானத்தில் பெரியபிரச்னைகள் எதுவுமில்லை.அதற்கு முந்தைய வருடம்உச்சநீதிமன்றம் 122அலைக்கற்றைஒப்பந்தங்களைச்செல்லாது என அறிவித்ததுமட்டும்தான் அப்போதுடெலிகாம் துறையில்ஏற்பட்ட பெரும் அதிர்வு.ஆனால், அதற்கடுத்தவருடங்களில் அதைவிடவும்பெரிய அதிர்வுகள்உண்டாகின. கொஞ்சம்கொஞ்சமாக விஸ்வரூபம்எடுத்த மொபைல்இன்டர்நெட், டெலிகாம்நிறுவனங்களின்வருவாயில் நேரடியாகக்கைவைத்தது.அதுவரைக்கும் டெலிகாம்நிறுவனங்களின்வருமானத்தில் பெரும்பங்குவகித்த எஸ்.எம்.எஸ் மற்றும்கால்களின் வருவாய்வெகுவாகக் குறைந்தது.மாறாக மொபைல்இன்டர்நெட் பயன்பாடும்,அதன்மூலம் வந்தவருவாயும் பெருகியது.இதைத் தொடர்ந்து வாய்ஸ்கால்களில் விட்ட லாபத்தை,டேட்டா பேக்குகளின் விலைமூலம் ஈடுகட்டினஇந்நிறுவனங்கள். ஆனால், 2016-ல் வந்த ஜியோஅதற்கும் முடிவுகட்டியது.குறைவான விலையில்அன்லிமிட்டட் டேட்டா,வாய்ஸ் கால் சேவைகளைஅள்ளி வழங்கவும்,பிறநிறுவனங்களும்தங்கள் விலையைக்குறைக்கவேண்டியநிர்பந்தத்துக்குஉள்ளாகின. இதனால்மீண்டும் டெலிகாம்நிறுவனங்களின்வருவாயில் பலத்த அடிவிழுந்தது. இந்தநெருக்கடியால் இந்தியதனியார் டெலிகாம்நிறுவனங்கள்எண்ணிக்கை மூன்றாகக்குறைந்தது. இன்றுஇந்தியாவில் ஏர்டெல்,வோடஃபோன், ஜியோஆகிய மூன்று தனியார்நிறுவனங்களிடையேதான்போட்டி. இதுபோக அரசின்பி.எஸ்.என்.எல் சேவை.இந்த நஷ்டத்தைச்சமாளிக்க, டெலிகாம்நிறுவனங்கள் தங்கள்கட்டண விவரங்களைமாற்றுவது, வேலிடிட்டிபேக்குகளைஅறிமுகப்படுத்துவது எனப்பல்வேறு நடவடிக்கைகளில்இறங்கியிருக்கின்றன. இதுஏன், எதனால் என்பதைமுன்பே பார்த்தோம். சரி,இப்போது OTT சேவைகளைஏன், டெலிகாம்நிறுவனங்கள்எதிர்க்கின்றன எனப்பார்ப்போம்.

ஏற்கெனவே பார்த்ததுபோல வாட்ஸ்அப், மெசஞ்சர்போன்றவை டெலிகாம்நிறுவனங்களின்வருவாயைப் பாதிக்கிறதுஎன்பதுதான் முதல்காரணம். இன்றைக்குஇந்தியாவில் டெலிகாம்சேவை வழங்குவதற்கானஒரு நிறுவனம்தொடங்கப்படும்என்றாலோ,நடத்தவேண்டும்என்றாலோ, நிறையவிதிமுறைகளைப்பின்பற்றவேண்டும்.உதாரணமாக, அரசிடம்அனுமதி வாங்குவது,அலைக்கற்றைகளை ஏலம்எடுப்பது, ட்ராயின்ஒழுங்குமுறைகள், அரசின்சட்டத்திட்டங்களுக்குட்பட்டுநடப்பது எனப் பல்வேறுவிஷயங்கள்இருக்கின்றன. ஆனால், OTTசேவைகளுக்கு எவ்விதகட்டுப்பாடுகளும் இல்லை. OTT சேவை என்பது என்ன?இணையம் மூலம்கிடைக்கும் அனைத்துசேவைகளுமே OTT (Over The Top) சேவைகள்தாம். இன்றுமொபைலில் நாம்பயன்படுத்தும் வாட்ஸ்அப்,மெசஞ்சர், ஃபேஸ்புக்,அமேசான் பிரைம்,ஃப்ளிப்கார்ட், பேடிஎம்போன்ற அத்தனையுமே OTT-க்குள் அடங்கும். ஆனால்,டெலிகாம் நிறுவனங்கள்குற்றம்சாட்டுவதுஇவையனைத்தையும்அல்ல; VoIP (Voice over Internet Protocol) எனப்படும்இன்டர்நெட் டெலிபோன்சேவையை வழங்கும்நிறுவனங்களைமட்டும்தான். உதாரணமாக,வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும்வாய்ஸ்கால் இரண்டும்டெலிகாம் நிறுவனங்களின்எஸ்.எம்.எஸ் மற்றும்வாய்ஸ்கால் சேவையைப்பாதிப்பது; ஸ்கைப், வைபர்,மெசஞ்சர் போன்றஅனைத்தும்இதேபோலத்தான். இப்படிடெலிகாம் நிறுவனங்களின்சேவைகளைப் போலவே,வேறு சேவைகளைவழங்கும் OTT சேவைகளைமட்டும்தான்குறிவைக்கின்றனடெலிகாம் நிறுவனங்கள்.தற்போது ட்ராயும் `OTT services as can be regarded the same or similar to the services provided by Telecom Service Providers’ என்றஅடிப்படையில் இவற்றுக்குமட்டும்தான் கட்டுப்பாடுகள்விதிக்கலாமா எனக்கேட்டிருக்கிறது. இது முதல்பிரச்னை.

ட்ராய்யின் புதுகட்டுப்பாடுகள் சரியா?

 

இரண்டாவது இந்த OTTசேவைகளின் பிசினஸ்மாடல். டெலிகாம்நிறுவனங்களின்சேவைகள் அனைத்துமேஅதன்உள்கட்டமைப்புகளைச்சார்ந்தே இருக்கிறது.உதாரணமாக, வாய்ஸ்மற்றும் டேட்டாஇரண்டுக்கும் டெலிகாம்நிறுவனங்கள்தாம்டவர்களையோ,கேபிள்களையோஉருவாக்க வேண்டும்.அலைக்கற்றைகளை பணம்கொடுத்துவாங்கவேண்டும். ஆனால், OTT நிறுவனங்களுக்குஇப்படியில்லை.உதாரணமாகவாட்ஸ்அப்பைஎடுத்துக்கொண்டால்,வாட்ஸ்அப்வாடிக்கையாளர்களின்டேட்டாவைப் பராமரிப்பது,சர்வர்களில் கையாள்வதுபோன்ற பணிகளைமட்டும்தான் அந்நிறுவனம்செய்யும். சேவையைப்பயன்படுத்துவதற்குடெலிகாம் நிறுவனங்களின்நெட்வொர்க்கைத்தான்பயன்படுத்தும்.சேவைகளைவாடிக்கையாளர்களிடம்கொண்டு சேர்ப்பதற்கெனபிரத்யேகமாக அவர்களிடம்எந்தவொரு கட்டமைப்பும்இல்லை. இப்படி எங்கள்நெட்வொர்க்கையேபயன்படுத்தி, எங்களுக்குப்போட்டியாகவே OTTநிறுவனங்கள் இயங்குவதுசரியா எனக் கேட்கின்றனடெலிகாம் நிறுவனங்கள்.

இப்படி ஒரே சேவையை ஒருநிறுவனம் கடும்கட்டுப்பாட்டுடனும்,பொருட்செலவுடனும்,இன்னொரு நிறுவனம்எவ்வித கட்டுப்பாடுகளும்இன்றியும் வழங்க ட்ராய்அனுமதிப்பது சரியாஎன்பதுதான் டெலிகாம்நிறுவனங்களின் வாதம்.இதற்கு மாற்றாக டெலிகாம்நிறுவனங்கள் கேட்பது, “OTT சேவைகளுக்குலைசென்ஸ் முறையைக்கொண்டுவர வேண்டும்;அவற்றை நடத்துவதற்கும்கட்டுப்பாடுகள்கொண்டுவர வேண்டும்;இல்லையெனில், டெலிகாம்நிறுவனங்களுக்கு OTTசேவைகள் பணம்செலுத்தவேணும்வழிசெய்யவேண்டும்”என்பதைத்தான். இதைமட்டும் வைத்துப்பார்த்தால்டெலிகாம் நிறுவனங்களின்வாதம் முழுவதும் சரிஎன்பது போலத்தான்தோன்றும். ஆனால்,இன்னொருபுறம் இந்தவிதிமுறைகள்எதுமாதிரியானபாதிப்புகளை ஏற்படுத்தும்என்பதையும்வைத்துப்பார்க்க வேண்டும்.

Airtel Jio Vodafone

 

டெலிகாம் நிறுவனமானதுமுதன்மையாக இரண்டுவிதமான சேவைகளைவழங்குகிறது. முதலாவது,வாய்ஸ்கால் / எஸ்.எம்.எஸ்போன்ற தொலைத்தொடர்புசேவைகள். இரண்டாவது,மொபைல் இன்டர்நெட்எனப்படும் இணையசேவை. இந்த இணையசேவையின் கீழ்தான் VoIPசேவைகளாக வாட்ஸ்அப்,ஸ்கைப் அனைத்தும் வரும்.இதில், ட்ராய்யின் பணிஎன்பது மொபைல்நிறுவனங்களின்பணிகளைப் பராமரிப்பது,பிரச்னைகளைத் தீர்ப்பது,அவர்களுக்கானஅலைக்கற்றைகளைஒழுங்குபடுத்துவது, புதியநிறுவனங்களுக்குஅனுமதி அளிப்பதுபோன்றவை மட்டும்தான்.மாறாக, வாட்ஸ்அப்,மெசஞ்சர், ஸ்கைப்போன்றவற்றின்சேவைகளைகட்டுப்படுத்துவதோ,ஒழுங்குபடுத்துவதோஅல்ல; அப்படியெனில் ட்ராய்இந்த விஷயத்தில்முடிவெடுக்க முடியுமாஅல்லது மத்திய தகவல்தொழில்நுட்பத்துறைதான்இதில் முடிவெடுக்கவேண்டுமா என்ற குழப்பம்நீடிக்கிறது. அடுத்த சிக்கல்,இந்தக் கட்டுப்பாடுகள்ஏற்படுத்தும் தாக்கம்.உதாரணமாக, OTTசேவைகளுக்குகட்டுப்பாடுகள் விதித்தால்அந்நிறுவனங்கள் கூடுதல்நிதிச்சுமையைச்சந்திக்கும். இது மக்களிடமேதாக்கத்தை ஏற்படுத்தும்.இரண்டாவது, இந்தலைசென்ஸ் முறையானதுபுதிய ஸ்டார்ட்அப்கள்எதுவும் OTT விஷயத்தில்ஆதிக்கம் செலுத்தவிடாமல்செய்வதற்கான வாய்ப்புஅதிகம். அடுத்தது, இந்தVoIP சேவைகளானதுவாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில்மட்டுமல்ல; கேமிங்கில் கூடசாட்டிங் ஆப்ஷன்இருக்கிறது. அப்படியெனில்அந்த சேவைகளுக்கும்கட்டுப்பாடு விதிக்கப்படும்அல்லது கட்டணம்நிர்ணயிக்கப்படும் என்றால்வாடிக்கையாளர்களுக்குஇன்று கிடைக்கும் கேமிங்மற்றும் சாட்டிங் அனுபவமேபாதிக்கப்படலாம்.

இதேபோல OTTநிறுவனங்கள் மீதுவைக்கப்படும் மற்றொருகுற்றச்சாட்டு, அவைஎவ்விதமானசட்டவிதிகளுக்கும்உட்படவில்லை என்பது.ஆனால், அதையும்மறுக்கின்றனஇந்நிறுவனங்கள். இந்தியஅரசின் தகவல்தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் படி பாதுகாப்புவிஷயத்தில் ஏற்கெனவேOTT நிறுவனங்களுக்குக்கட்டுப்பாடுகள்இருக்கின்றன. அவையேபோதுமே என்பது இவர்கள்வாதம். மேலும், OTTநிறுவனங்கள் டெலிகாம்மீது வைக்கும் இன்னொருகுற்றச்சாட்டு இன்றுடெலிகாம் நிறுவனங்களேதங்கள் எல்லையைத்தாண்டி பிற OTTசேவைகளைவழங்குகின்றன.உதாரணமாக ஏர்டெல் டிவி,ஜியோ சினிமாபோன்றவை. இப்போது VoIPசேவைகளுக்குவிதிக்கப்படும்கட்டுப்பாடுகள் அடுத்து பிறOTT சேவைகளுக்கும்பரவும்போது டெலிகாம்நிறுவனங்களின் OTTசேவைகள் முன்னுரிமைபெறலாம். இதுவும்தவறுதானே என்பதுஎதிர்தரப்பு வாதம். சரி,அப்படியென்றால் இந்தப்பிரச்னைக்கு என்னதான்தீர்வு?

இன்டர்நெட்

 

இந்தியாவுக்குமுன்னதாகவே இந்த OTT Vsடெலிகாம் சண்டைபிறநாடுகளில்தொடங்கிவிட்டது. இதற்குஐரோப்பிய யூனியன்மற்றும் பிரான்ஸ்,இந்தோனேஷியா,ஜெர்மனி போன்ற நாடுகள்அந்தந்த நாட்டின்தன்மைக்கேற்பவிதிமுறைகளையும்வகுத்துள்ளன. இதேபோலட்ராயும் தொலைத்தொடர்புநிறுவனங்களின் பிரச்னைஎன்று மட்டும் பார்க்காமல்,இணையத்தின் பிரச்னைஎன்றேதான் இதனைஅணுகவேண்டும்.அப்போதுதான் இனிஉருவாகவிருக்கும் OTTநிறுவனங்களுக்கும்,இப்போது இருக்கும்டெலிகாம்நிறுவனங்களுக்கும் எந்தப்பிரச்னையும் இல்லாமல்இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here