வேளாண் அதிகாரி பணிகளுக்கான நெட் தேர்வு அறிவிப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணிகளை நெட் தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேசிய தகுதி தேர்வு எனப்படும் இந்த நெட் தேர்வை (NET) எழுதுபவர்கள், வேளாண் கல்லூரி – பல்கலைக்கழகங்களில் இந்த பணியிடங்களை பெறலாம். அறிவியல் பட்டமேற்படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு இந்த தகுதித் தேர்வு பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டுக்கு 2 முறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2018-ம் ஆண்டுக்கான 2-வது நெட் ஐ.சி.ஏ.ஆர். அமைப்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1-7-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வை எழுத உச்ச வயது வரம்பு தடையில்லை.

எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள் வேளாண் சார்ந்த முதுநிலை படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 29-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.asrb.org.in மற்றும் http://www.icar.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here