அதிருப்தி:பணமில்லாமல் வழக்கமான பலன் பெற முடியவில்லை:உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்

மதுரையில் அரசு வழங்கும் வழக்கமான பணப் பலன்கள்
பெற கல்வி அலுவலகங்களில் கட்டாய கட்டணம் வசூலிப்பதாக உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்*

*மாவட்டத்தில் சி.இ.ஓ., நான்கு டி.இ.ஓ.,க்கள், 15 பி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் செயல்படுகின்றன*

 *இங்கு ஆசிரியர்களின் தேர்வுநிலை, சிறப்பு நிலை, உயர் கல்வி ஊக்க ஊதியம் உள்பட பல்வேறு பணப் பலன்கள் தொடர்பான ஆவணங்கள் எழுதப்படும்*

*இதற்காக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் நடத்தப்படுகிறது. பணம் வழங்காவிட்டால் பைல்கள் கிடப்பில் போடப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது*

*உதவி பெறும் ஆசிரியர்கள் கூறியதாவது: சி.இ.ஓ., அலுவலகம் தவிர பிற அலுவலகங்களில் ‘வசூல் வேட்டை’ நடக்கிறது*

*உயர்கல்வி ஊக்க தொகைக்கு 10 ஆயிரம், சரண்டருக்கு 2 ஆயிரம், தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற 10 ஆயிரம் ரூபாய் என பட்டியல் வைக்காத குறையாக வசூலிக்கின்றனர்*

*சில ஊழியர் மட்டுமே நேர்மையாக உள்ளனர். ஒரு பள்ளியில் 13 ஆசிரியர்களிடம் நடந்த வசூல் குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here