எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்!

சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*

*ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, ரயில் வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அந்த நாய்க்கறிகள், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டபோது பிடிபட்டன. ரகசிய தகவலைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸ், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.*

*மாட்டுக்கறி என்று, கூறிக்கொண்டு நாய்க்கறியை அவர்கள் கொண்டு வந்தது, சோதனையில் தெரியவந்துள்ளது.*

*சென்னை உட்பட தமிழகம் முழுக்க, நாய்க்கறியை சில ஹோட்டல்கள், தாபாக்களுக்கு சப்ளை செய்யும் நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பான விசாரணையில், நாய்க்கறியை எந்தெந்த ஹோட்டல்கள் வாங்குகின்றன என்ற தகவல்கள் கிடைக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.*

*சென்னையில் சில ஹோட்டல்களில், பிரியாணியில், மட்டனுக்கு பதில், நாய்க்கறி கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது கடந்த கால வரலாறு. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் நல்லவேளையாக தப்பினர் சென்னைவாசிகள்.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here