நேற்று அதிகாலை முதலே வெளுத்து வாங்கிய கஜா புயலின் பாதிப்பின் எதிரொலி இன்னும் பலமாக முழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பலத்த காற்றுடன் கூடிய மழை, விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது.

இந்த கஜா புயல் இன்று மேற்கு நோக்கிச் சென்று, அரபிக் கடலை அடையும், என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாக மாறும்.

இது தவிர, இன்னும், தமிழகத்தை மிரட்ட இரண்டு புயல்கள் தயார் நிலையில் இருப்பதாக தனியார் வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

வரும் நவம்பர் 23 – 28 வரை, 29 – டிசம்பர் 1 வரை, டிசம்பர் 5 முதல் 10-ஆம் தேதி வரை, டிசம்பர் 12 முதல் 17-ஆம் தேதி வரை, டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை, தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வர இருக்கின்றன.

இவற்றில் இரண்டு பெரிய புயல் சின்னங்களாக மாற உள்ளன. அவற்றுக்கு, “ஃபேதாஸ்” மற்றும் “ஃபாணி” என்று பெயர் சூட்டி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here