தமிழகத்தில் அரசுமேல்நிலைப் பள்ளிகளில்காலியாக உள்ள 809கணினி ஆசிரியர்பணியிடங்களைஉடனடியாக நிரப்பவேண்டும் என பாமகஇளைஞரணித் தலைவர்அன்புமணி ராமதாஸ்வலியுறுத்தியுள்ளார்.

  

இதுகுறித்து அவர் இன்றுவிடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கானஅரையாண்டுத் தேர்வுகள்அடுத்த மாதம் 10-ஆம் தேதிதொடங்கும் என்றுபள்ளிக்கல்வித்துறைஅறிவித்துள்ளது. ஆனால்,தமிழ்நாட்டில் 750 அரசுமேல்நிலைப் பள்ளிகளில்கணினி அறிவியல்பாடத்திற்கு ஆசிரியர்களேநியமிக்கப்படாத நிலையில்,அப்பாடத்திற்கு தேர்வுகளைநடத்துவதன் மூலம் பினாமிஅரசு புதிய கல்விப் புரட்சிபடைக்கிறது.

  

மாணவர்களின்கல்வித்தேவையைநிறைவேற்றும் வகையில்ஒவ்வொரு ஆண்டும்குறைந்தது 100 அரசுஉயர்நிலைப்பள்ளிகளாவதுமேல்நிலைப் பள்ளிகளாகதரம் உயர்த்தப்பட்டுவருகின்றன. அவ்வாறுதரம் உயர்த்தப்படும்பள்ளிகளுக்கு போதியஎண்ணிக்கையில்ஆசிரியர்களைநியமித்தால் தான் தரம்உயர்த்தப்பட்டதுஅர்த்தமுள்ளதாக அமையும்.ஆனால், அரசு உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக பேரவையில்அறிவித்து விட்டு,அப்பள்ளிகளுக்குஆசிரியர்களைநியமிக்காமல் இருப்பதுதான் அவர்களுக்குஇழைக்கப்படும்நம்பிக்கைத் துரோகம்ஆகும். அவ்வாறு 2016-17ஆம் ஆண்டு வரை தரம்உயர்த்தப்பட்டமேல்நிலைப்பள்ளிகளில்809 கணினி ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்படாததால் அங்கு கணினிஅறிவியல் பாடம் பயிலும்மாணவர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்பணியிடங்கள் காலியாகஇருந்தால், தற்காலிகஏற்பாடாக பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் மூலம்தற்காலிக ஆசிரியர்கள்நியமிக்கப்படுவது வழக்கம்.இப்போது கூட அரசுமேல்நிலைப்பள்ளிகளில்உள்ள காலியிடங்களைநிரப்பும் வகையில் 1474முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்களை மாதம்ரூ.7,500 என்ற ஊதியத்தில்தற்காலிகமாக நியமித்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது.ஆனால், இதில் கூடகணினி ஆசிரியர்கள்நியமிக்கப்படாததால்கணினி அறிவியல் குறித்தஅடிப்படை அறிவு கூடஇல்லாத ஒரு தலைமுறைகணினி அறிவியல்பாடத்தில் அரையாண்டுத்தேர்வு எழுதப் போகிறது.இன்னும் சில மாதங்களில்இவர்கள் ஆண்டுபொதுத்தேர்வையும்எழுதுவர்.

  

கணினி அறிவியல்என்றால் என்ன என்பது கூடதெரியாமல் அப்பாடத்தின்தேர்வை எழுதும்மாணவனால் எதை சாதிக்கமுடியும்? அம்மாணவன்எவ்வாறு தேர்ச்சி பெற்றுஉயர்கல்விக் கற்கச்செல்வான்? ஒருமாநிலத்தின்வளர்ச்சிக்கான அடிப்படைத்தேவை கல்வி ஆகும்.அதனால், மாநிலத்தைமுன்னேற்ற வேண்டும்என்று நினைக்கும் அரசு,மாணவர்களுக்கு தரமானகல்வியை வழங்குவதற்கு தேவையானநடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டியதுஅவசியமாகும். ஆனால்,கல்வி குறித்தோ,மாநிலத்தின்  வளர்ச்சிகுறித்தோ எந்ததொலைநோக்குப்பார்வையும் பினாமிஅரசுக்கு இல்லாததால்தான் கணினி அறிவியல்பாடத்திற்கு  ஆசிரியர்கள்கூட நியமிக்கப்படாமல்கல்வித்துறை சீரழிகிறது.

கல்வியில் அனைவருக்கும்சம வாய்ப்பு வழங்குவதுதான் சமூகநீதியின்அடிப்படை ஆகும். ஆனால்,தமிழ்நாட்டில் 4206 அரசு மற்றும் அரசு உதவி பெறும்மேல்நிலைப்பள்ளிகள்உள்ளன. 2873 தனியார் மேல்நிலைப் பள்ளிகள்உள்ளன. தனியார்பள்ளிகளில்பெரும்பாலானவற்றில்ஒவ்வொரு பாடத்திற்கும்,ஒவ்வொரு வகுப்புக்கும் 2அல்லது 3 ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டு சிறப்புப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அரசுபள்ளிகளில் தரம்உயர்த்தப்பட்ட பள்ளிகளைத்தவிர மற்ற பள்ளிகளில்கணினி அறிவியல்பாடத்திற்கு ஆசிரியர்கள்உள்ளனர். அங்கு பயிலும்மாணவர்களுக்கு கணினிப்பாடம் கற்பிக்கப்படுகிறது.அவர்களுடன் கணினிபாடமே நடத்தப்படாதமாணவர்களை 12-ஆம்வகுப்புப் பொதுத்தேர்வுகளில் போட்டியிடவைப்பது எந்த வகையில்சமத்துவமாகவும்,சமூகநீதியாகவும்இருக்கும்?

அரசு மேல்நிலைப்பள்ளிகளைப்பொறுத்தவரை முதுகலைப்பட்டதாரி கணினிஆசிரியர்கள் நியமனம்இன்று வரைமுறைப்படுத்தப்படவில்லை.மற்ற பாடங்களுக்கானஆசிரியர் பணிகளில்காலியிடங்கள் ஏற்பட்டால்அது அடுத்து வரும்ஆசிரியர் தேர்வில்நிரப்பப்படும். ஆனால்,கணினி அறிவியல்ஆசிரியர் பணியிடங்கள்அவ்வாறுநிரப்பப்படுவதில்லை.தமிழகத்தில் முதன்முதலில்1999-2000 ஆவது ஆண்டில்1197 அரசுமேல்நிலைப்பள்ளிகளில்1880 கணினி ஆசிரியர்கள்மாதம் ரூ.4000 ஊதியத்தில்தற்காலிக அடிப்படையில்நியமிக்கப்பட்டனர். பின்னர்அவர்களில் 1348 பேர் 2010-ஆம் ஆண்டில் சிறப்புப்போட்டித் தேர்வு மூலம் பணிநிலைப்பு செய்யப்பட்டனர்.மீதமுள்ள 652 பணிநீக்கப்பட்ட போதிலும்,உச்சநீதிமன்ற ஆணைப்படிஅவர்களுக்கும் 2016&ஆம்ஆண்டில் பணி நிலைப்புவழங்கப்பட்டது.இவர்களைத் தவிர வேறுகணினி ஆசிரியர்கள்எவரும் இன்று வரைமுறைப்படுத்தப்பட்டவகையில்நியமிக்கப்படவில்லை.

  

அரசு பள்ளிகளில்காலியாக உள்ள 748முதுகலை கணினிஆசிரியர் பணியிடங்கள்நிரப்பப்படும்  என்று 2016-ஆம் ஆண்டுசட்டப்பேரவையில்அப்போதைய முதல்வர்ஜெயலலிதா அறிவித்தபோதிலும், அது இன்றுவரைசெயல்படுத்தப்படவில்லை.தமிழகத்தில் 60ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் முதுகலைகணினி அறிவியல்ஆசிரியர் தகுதி பெற்றுபணிக்காககாத்திருக்கின்றனர்.அவர்கள் நலன் கருதியும்,மாணவர்கள் நலன்கருதியும் அரசு பள்ளிகளில்காலியாக உள்ள 809கணினி ஆசிரியர்பணியிடங்களை முதலில்தற்காலிகமாகவும், நடப்புக்கல்வியாண்டு முடிவதற்குள்நிரந்தரமாகவும் அரசு நிரப்பவேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

மாணவர்கள் கல்வி நலன்சார்ந்த கோரிக்கையைஅறிக்கையாக வெளியிட்டஅன்புமணி அய்யாஅவர்களுக்கு கணினிஆசிரியர்கள் சங்கத்தின்சார்பில் நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்..

திரு வெ.குமரேசன்,

பொதுச்செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள்சங்கம்®655/2014.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here