கஜா புயல்; இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் 24ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் உள்ளது.  மேற்கு, தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீட்டரில் இருந்து 13 கி.மீட்டராக அதிகரித்துள்ளது.

அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரமடையும் புயல் இன்று மாலை அல்லது இரவு கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்.
இதனால் கடலோர மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அந்த தேர்வுகள் நாளைக்கு பதிலாக 24ந்தேதிக்கு நடைபெறும் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here