👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒண்டிக்குப்பம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்

இன்று என் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழாவில் மாணவர்களின் QR CODE அடையாள அட்டையை மதிப்புமிகு கடம்பத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.க.ரகுபதி சார்
அவர்களால்
வழங்கி சிறப்பிக்கப்பட்டது…

 

மாணவர்களுக்கு சுயவிவர அடையாள அட்டை QR CODE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்துள்ளேன்..

மாணவர்களின் அடையாள அட்டையின் முன் பக்கத்தில் மாணவரின் சுயவிவரங்களைக் கொண்ட QR CODE உருவாக்கப்பட்டுள்ளது..

அடையாள அட்டையின் பின்பக்கத்தில்
நான்கு நிறங்களில்
QR CODE வடிவமைத்துள்ளேன்..

பள்ளிக்கு தனியாக இணையதளத்தை உருவாக்கி உள்ளேன்
*கருப்பு நிறத்தில் வடிவமைத்துள்ள QR CODE* ஓபன் செய்து பார்வையிடலாம்..

மாணவர்களுக்கு தினமும் தரப்படுகின்ற
வீட்டுப்பாடங்களை தெரிந்து கொள்ளும் வகையில் *பச்சை நிற QR CODE*
வடிவமைக்கப்பட்டுள்ளது….. தினமும் வீட்டுப்பாடங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்..
மாணவர்களுக்கு தேவையான ஆன்லைன் தேர்வுகளை உருவாக்கி உள்ளேன்..
பாடத்திற்கு தொடர்புடைய
வார்த்தை விளையாட்டுக்களை உருவாக்கி பதிவு
செய்துள்ளேன்…
மாணவர்கள் விளையாடலாம்…

மாணவர்கள் தாங்கள் செய்யும் செயல்திட்டங்கள்
தனித்திறமை
பாடல் பாடுதல்
நடனம்
யோகா
ஓவியம் என
தனித்திறமையை
அனைவரும் அறிந்து கொள்ளும்
வகையில்
*நீலம் நிறத்தில் QR CODE* வடிவமைத்துள்ளேன்…

பள்ளிக்கு தனியாக
YOU TUBE CHANNEL
உருவாக்கி உள்ளேன்
E CONTENT பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளேன்
மாணவர்கள் தங்கள் பாடங்களை திரும்ப திரும்ப படிப்பதற்கும் கருத்துக்களை தனக்கு தேவைப்படும் போது அறிந்து கொள்வதற்கு வசதியாக உருவாக்கி உள்ளேன்..

YOU TUBE CHANNEL
*மஞ்சள் நிற QR CODE* யை‌ ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்…

என் பள்ளியின் பிற வகுப்பு மாணவர்களுக்கும் தயாரித்து தொகுத்துள்ளேன்…
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்….

📖📒📘📙📖📚📚
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
ஊ. ஒ. தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here