தேர்வு அறையில் ஆசிரியையை தாக்கிய மாணவன் !!

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார், வனத் துறை மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று, வணிகவியல் தேர்வு நடந்த வகுப்பறையில், ஆசிரியை அனிதா மேற்பார்வையாளராக இருந்தார். 

அப்போது, 17 வயதுள்ள மாணவன், அலைபேசியில் புத்தகத்தை படம் பிடித்து, அதை பார்த்து தேர்வு எழுதினான். இதை தட்டிக் கேட்ட அனிதாவின் கன்னத்தில், அறைந்து தப்பியோடினான்.காதில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டிய நிலையில், அனிதா மயங்கி விழுந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here