கற்றல் விளைவுகள்’ பயிற்சி

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 
சார்பில், ஆசிரியர்களுக்கு ‘கற்றல் விளைவுகள்’, பயிற்சி நடத்தப்பட உள்ளது

மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்வியாண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது

நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை இணைத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது

இதனால், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன்களை அளவீடு செய்வதற்கு, மாநில மற்றும் தேசிய அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது

இந்தத்தேர்வுகளில், மாணவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது

நடப்பாண்டில், இத்தகைய தேர்வுகளை கையாள்வதற்கும், அடைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், ஆசிரியர்களுக்கு ‘கற்றல் விளைவுகள்’, புதிய பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here