கஜா புயல், வரும் 15ஆம்தேதியன்று கரையைகடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதால்,தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை

பெய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

 

நவம்பர் 15-ஆம் தேதிமுற்பகலில் கஜா புயல்சென்னை-நாகை இடையேகரையைக் கடக்கும் என்றுவானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.  கஜாபுயலானது தற்போதுநாகைக்கு கடகிழக்கே 770கி.மீ., தொலைவில் மையம்கொண்டுள்ளது. இதுசென்னை – நாகை இடையேநவம்பர்-15 அன்று கரையைகடக்கும். இதன் கரணமாகநவம்பர் 14-ம் தேதி இரவுமுதல் புயல் கரையைகடக்கும் வரை கனமழைபெய்யக் கூடும்.

ஜா புயல் காரணமாகதஞ்சை, திருவாரூர், நாகை,காரைக்கால், கடலூர்,புதுச்சேரி, விழுப்புரம்மாவட்டங்களில் மணிக்கு80-90 கி.மீட்டர் வேகத்தில்காற்று வீசுக்கூடும். சிலசமயங்களில் 100 கி.மீட்டர்வேகத்தில் காற்று வீசும்.இந்த பகுதிகளில் கடல்கொந்தளிப்புடன்காணப்படும்.

தஞ்சை, திருவாரூர், நாகை,காரைக்கால், கடலூர்,புதுச்சேரி, விழுப்புரம்மாவட்டங்களில் ஒரு சிலஇடங்களில் கனமழை முதல்மிக கனமழை பெய்யும்.கடல் அலையின் உயரம்இயல்பை விட ஒரு மீட்டர்அதிகமாக இருக்கும்.மீனவர்கள் வரும் 15-ம் தேதிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என்றுசென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், கஜா புயல்,வரும் 15ஆம் தேதியன்றுகரையை கடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதால்,தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழைபெய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.இதனால்  8 மாவட்டங்களில்பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்க வாய்ப்பு உள்ளது.அதன்படி, சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் , விழுப்புரம், நாகை,திருவண்ணாமலை,வேலூர் ஆகிய  8மாவட்டங்களில்பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்படும் எனதகவல் வெளியாகிஉள்ளது. விரைவில்,அந்தந்த மாவட்டஆட்சியர்கள்  இதற்கானஅறிவிப்புகளைவெளியிடுவார்கள் எனகல்வித்துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here