சென்னை: ஜனவரி முதல்வாரத்தில் தமிழக சட்டசபைதொடங்க உள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.ஆளுநர் பன்வாரிலால்புரோஹித் உரையுடன்சட்டசபை கூட்டம் தொடங்கஉள்ளது. ஒவ்வொருஆண்டும் ஜனவரி மாதம் 

கவர்னர் உரையுடன்சட்டசபை கூடுவது வழக்கம்.இதன்படி தமிழகசட்டப்பேரவையின் 5வதுகூட்டத்தொடர் அடுத்தஆண்டு ஜனவரி முதல்வாரத்தில் ஆளுநர்பன்வாரிலால் புரோஹித்உரையுடன் தொடங்கஉள்ளது.

அதிமுக அரசுபொறுப்பேற்றுள்ள 15வதுசட்டசபையின் 4வது கூட்டம்ஜனவரி 8, 2018ல் நடந்தது.இதைத் தொடர்ந்து நிகழ்நிதியாண்டிற்கான பட்ஜெட்அதனைத் தொடர்ந்துமானியக் கோரிக்கைகளும்மே மாதம் 29ம் தேதிதொடங்கி ஜூலை 9ம் தேதிவரை நடைபெற்றது. 6 மாதகால இடைவெளிக்குள்அடுத்த கூட்டத்தொடரைநடத்த வேண்டும் என்பதால்2019 ஜனவரி முதல்வாரத்தில் தமிழக சட்டசபைகூட உள்ளது. இந்தகூட்டத்தொடரானது 5நாட்கள் நடைபெறும் என்றுதெரிகிறது. 

இந்த 5 நாட்கள்சட்டசபையில் காரசாரவிவாதம் இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் மறைந்ததி.மு.க. தலைவர்கருணாநிதிக்கு இரங்கல்தெரிவித்து தீர்மானம்கொண்டு வரப்படும்.இதேபோல்திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ்மறைவுக்கும் இரங்கல்தெரிவிக்கப்படும். ராமசாமிபடையாட்சியார் உருவப்படம்சட்டசபையில் திறக்கப்படும்என்று முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமிஏற்கனவேஅறிவித்திருந்தார்.அதன்படி பேரவை கூட்டத்தொடரின் போது ராமசாமிபடையாட்சியாரின்உருவப்படம்திறக்கப்படுவதற்கானவாய்ப்புகள் இருப்பதாகதலைமைச் செயலகவட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here