அறிவியல் அறிவோம் :தலைசுற்றி மயக்கமுறச் செய்வது எது?

தலைசுற்றி மயக்கமுறச் செய்வது எது?

வட்டமாக, மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலைசுற்றி மயக்கம் ஏற்படும். 

சமச்சீரைக் கட்டுப்படுத்தும் காதின் உட்பகுதியிலுள்ள உணர்ச்சி நீர்மம் (Sensitive liquid) உடல் சுற்றுவது நின்றபிறகும் தொடர்ந்து சுற்றிக் கொண்டுள்ளது. ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. 
ஆயினும் சில விநாடிகளுக்குள் அந்த நீர்ம நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது.

இந்த உணர்ச்சி கிறுகிறுப்பு (Vertigo) எனவும் அழைக்கப்படும். உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவனுக்கும், கப்பலில் போகின்ற போது பார்ப்பவனுக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். 

உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது அல்லாமல் பெரும்பாலும் உடல் சார்ந்த தன்மை இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here