வாட்ஸப்- இல் புதிய இப்படி ஒரு புதிய அம்சமா? உடனே தெரிஞ்சுக்கோங்க..!

வாட்ஸ்ஆப் ஒவ்வொரு முறையும் புதிய அப்டேட்டை
உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் அனைவராலும் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்ஸ் அம்சம் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதை எவ்வாறு பெறுவது? எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் உங்களது மொபைலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ்ஆப் -யை அப்டேட் செய்ய வேண்டும். இதன் அளவு 30 எம்.பி வரை இருக்கும். இதை அப்டேட் செய்தவுடன் உங்களது வாட்ஸ் ஆப்பில் ஏதேனும் ஒருவரது சாட்டை(chat) திறந்து கீழே டைப் செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள ஸ்மைலி குறியீட்டைத் தேர்வு செய்யவும்.

அதில் GIF குறியீட்டுக்குப் பக்கத்தில் ‘ஸ்டிக்கர்ஸ்’ என்ற ஒரு குறியீடு இருக்கும். இதில் நமக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை தேர்வு செய்யலாம். மொத்தமாக ஒரு ஸ்டிக்கர்ஸ் தொகுப்பை டவுன்லோடு செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here