பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: டெண்டர் அறிவிக்க அரசாணை

பள்ளி மாணவர்களுக்கானஸ்மார்ட் கார்டு திட்டத்திற்குடெண்டர்அறிவிக்கப்பட்டுள்ளதால்,விரைவில் வினியோகிக்கவாய்ப்புள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

  

தமிழகத்தில், பள்ளிமாணவர்களுக்கு, ‘ஸ்மார்ட்கார்டு’ எனும் அடையாளஅட்டை வழங்கும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்விதகவல் மேலாண்மை(எமிஸ்) இணையதளம்உருவாக்கப்பட்டது.இதில்,தகவல்களை திரட்டிதொகுப்பதில், சிக்கல்நீடித்ததால்,மேம்படுத்தப்பட்ட எமிஸ்இணையப்பக்கம்சமீபத்தில்உருவாக்கப்பட்டது.பள்ளிகளின் தகவல் பலமுறைசரிபார்க்கப்பட்ட பின்,தற்போது ஸ்மார்ட் கார்டுதயாரிக்கும் பணிகள்துவங்கப்பட்டுள்ளன.

பார்கோடு இணைத்து,மாணவர்களின் பெயர்,பள்ளி பெயர், முகவரி, ரத்தவகை உள்ளிட்ட அடிப்படைதகவல்களுடன் அச்சிட,தற்போது டெண்டர்அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், விரைவில்மாணவர்களுக்குஅடையாள அட்டைவழங்கப்படும் என,கல்வித்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.

கல்வித்துறை அதிகாரிகள்கூறுகையில்,’மூன்றாம்பருவத்துக்கு, புதிய சீருடைவழங்கப்படும். இதனுடன்,அடையாள அட்டை வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது. ‘டெண்டர் கோர, அரசாணைவெளியிடப்பட்டுள்ளதால்,விரைவில் பள்ளிகளுக்குவினியோகிக்கப்படும்’என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here