இனி 100- ஐ விட இது வேகம்: அவசர தேவைக்காக காவல்துறையின் அரிய செயலி (APP) அறிமுகம்

அவசர தேவைக்கு எண் 100-ஐ அழைப்பதை வேகமாக

 பொதுமக்களுக்காக உதவிடும் காவலன் ஆப் செயலியை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயன்பற்றி போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைக்கு காவல் துறையை அழைக்க தங்கள் கைபேசிகளில் Kavalan SOS app (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன், உத்தரவின் படி காவல் தலைமையிட இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு, மேற்பார்வையில் துணை ஆணையாளர், காவல் கட்டுப்பாட்டறை மு.பிரபாகர் தலைமையில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான கைபேசி செயலி ( Kavalan SOS app) சம்மந்தமாக, 50,000 கைபிரதிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. மேலும் இந்த காவலன் ( Kavalan SOS app) செயலி அனைத்து ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பயன்படுத்தலாம்.

அவசரத்தில் அழைப்பதற்கு இந்த பொத்தானை ஒரு முறை தொட்டாலே அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் அறியப்படும். அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் வசதி காவல் கட்டுப்பாட்டறையில் உள்ளது. மேலும், அழைப்பவரின் அந்த நேர கண்காணிப்பு (real time tracking) வசதியும் உள்ளது. அழைப்பவரின் இருப்பிட தகவல் மற்றும் வரைபடம் இந்த செயலியில், பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கு தானாகவே பகிரப்படும். காவலன் Kavalan SOS app பொத்தானை தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைபேசி கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். அதிர்வு தூண்டல் (shake trigger) வசதியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம். காவலன் Kavalan SOS app ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயங்கும் வசதி உள்ளது. இணைய இணைப்பு இல்லாத (Data not available) இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை (Auto SMS Alert) மூலமாக செயல்படும். Kavalan SOS app செயலி மிகவும் அவசர நிலையில் இருக்கும் பெண்கள், முதியோர்கள் மற்றும் குடிமக்களின், பாதுகாப்பு செயலியாக 24 மணி நேரமும் இயங்குவதால் இந்த வசதியை தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

APPLICATION DOWNLOAD செய்ய CLICK HERE

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here