பசுமை பட்டாசுகளுக்கு மவுசு! மாசு கட்டுபாட்டிற்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி..!


ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பு, இந்திய கலாச்சாரத்தை தூக்கிபிடிப்பவர்களுக்கும்,சடங்கு சம்பிரதாயங்களுக்கு, சட்டத்திற்கும் இடையேயான போராட்டம் என்பது தொடர்கதையாகி தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அதிக நச்சுள்ள எரிப்பது, பட்டாசுகளை வெடிப்பது போன்றவற்றின் மூலம் மனிதர்கள் தாக்குபிடிக்க முடியாத அளவிற்கு காற்றின் தரத்தை மோசமடையச்செய்துவிட்டு நாமே புகாரும் கூறுவோம். அரசாங்கமும் கலாச்சார ரீதியில் உணர்ச்சிவசமான இந்த விசயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் வேடிக்கைபார்க்கும்.

உச்சநீதிமன்றம் எப்போதும் இடையில்புகுந்து ஏதேனும் சமசரம் ஏற்படுத்த முயற்சிக்கும். அதிக மாசுஏற்படுத்தும் பட்டாசுகளின் விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் தற்போது உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளதன் காரணமாக, மக்கள் பசுமை பட்டாசுகள் பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறைவாக மாசுபடுத்தும் இவ்வகை பசுமை பட்டாசுகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்தன் அறிவித்துள்ளார்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் என்பதன் காரணமாக ‘பசுமை பட்டாசுகள்’ என்னும் இந்த யோசனை அதீத வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் வெளியான 5 நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது விவாதங்களை கிளப்பியதுடன், சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பலர் கேலிகிண்டலும் செய்து வருகின்றனர்.

கேலிகள் ஒருபுறம் இருக்க, பசுமை பட்டாசுகள் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.

என்ன வித்தியாசம்?

இந்ந வகை பட்டாசுகள் ஒளி மற்றும் ஒலி மாசுபாட்டை பொறுத்தவரை சாதாரண வகை பட்டாசுகளுக்கு எந்தவகையிலும் சளைத்தவையல்ல. ஆனால் பசுமை பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், பட்டாசு வெடித்தபின்னர் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால், காற்று மாசுபாட்டை குறைக்க முடியும்.

சரியான நிறம், பிரகாசம், பட்டாசு கால இடைவெளி போன்றவற்றை உருவாக்க பல்வேறு விதமான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை ஒவ்வொன்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு பல மாசுபாடுகளை ஏற்படுத்தி பல்வேறு சுவாச நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அதுமட்டுமின்றி அமிலமழை போன்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் காரணமாக அமைகின்றன. இவையெல்லாம் கருத்தில்கொண்டு கடந்த வாரம், உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த தீர்ப்பில் எந்தவொரு கொண்டாட்டங்களுக்கும் பசுமை பட்டாசுகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கூறியுள்ளது.மற்ற அனைத்து வகை பட்டாசுகளும் தலைநகர் டெல்லியில் மட்டும் தடை செய்துள்ளதாக விளக்கமளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here