ஜாக்டோ- ஜியோ ஸ்டிரைக் அறிவிப்பு

‘மாநிலம் முழுவதும், 10 லட்சம் அரசு ஊழியர்கள், நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்,” என, திருமங்கலத்தில், ‘ஜாக்டோ- ஜியோ’ எனப்படும், அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர், தாஸ் தெரிவித்தார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமையில் மதுரை, திருமங்கலத்தில் நேற்று நடந்தது. பின், தாஸ் கூறியதாவது:’பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்’ என, அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை.

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள முரண்பாடுகள் களையப்படவில்லை. பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி, எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதில், பள்ளிகளை மூட முயற்சி நடக்கிறது. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்; பஸ்கள் இயங்காது.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here