‘குரூப் — 2’ தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு

‘குரூப் – 2’ பதவிக்கு, ஆறு லட்சம் பேர் விண்ணப் பித்துள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் – 2 பதவியில், 1,199 காலியிடங்களுக்கான, முதல் நிலை எழுத்து தேர்வு, வரும், 11ம் தேதி நடக்கிறது. இதற்காக, சென்னை உட்பட, 32 மாவட்டங்களிலும், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்வுக்கு, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், பரிசீலினைக்கு பின், சரியாக விபரங்களை பதிவு செய்து, கட்டணம் செலுத்தியவர்களுக்கு, ‘ஹால் டிக்கெட்’ வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பயனாளர் குறியீட்டை பயன்படுத்தி, www.tnpscexams.net மற்றும் tnpscexams.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம். 

இதில், சந்தேகம் இருந்தால், 1800 425 1002 என்ற, கட்டணமில்லாத தொலைபேசி அல்லது, Contacttnpsc@gmail.com என்ற, மின்அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல, தொழிலாளர் அலுவலர் அல்லது தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல், வரும், 9ம் தேதி நடக்கிறது. விபரங்களை, www.tnpsc.gov.in- என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here