தேசிய திறனாய்வு தேர்வு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு முதல் கட்ட தேர்வு நாளை நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கு 505 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, அறிவு திறன் தேர்வு நடக்கும். 11:00 முதல், 11:30 வரை இடைவேளை. அதன்பின், 11:30 முதல், பிற்பகல், 1:30 மணி வரை, கல்வி திறன் தேர்வு நடக்கும். மாணவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மையங்களில் இருக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here