உங்களுடைய வேலிடிட்டிXX-ம் தேதியுடன்முடிவடைகிறது; எனவேஅவுட்கோயிங் கால்கள்அனைத்தும் XX-ம்தேதியுடன் நிறுத்தப்படும்.சேவையைத் தொடரவேண்டுமென்றால் உடனேவேலிடிட்டி ரீசார்ஜ்

 

செய்யவும்” – இப்படி ஒருமெசேஜ் உங்களுக்குக்கடந்த வாரத்தில் ஏர்டெல்,வோடஃபோன்வாடிக்கையாளர்களுக்குவந்திருக்கலாம்;வராதவர்களுக்கு இனிமேல்வரும். எதற்காக திடீரெனஇப்படி வருகிறது எனக்குழம்புகிறீர்களா? இந்தக்கட்டுரைஉங்களுக்காகத்தான்!

செல்போனில் இலவசஇன்கமிங் கால்கள் இனிகிடையாதா?! #Alert

மேலே பார்த்தது போலவேஎனக்கும் சமீபத்தில், “உங்கள் அவுட்கோயிங்கால்கள் இந்தத் தேதியுடன்நிறுத்தப்படும் என ஒருமெசேஜ் வந்தது.இத்தனைக்கும் என்னுடையமெயின் பேலன்ஸ்ஜீரோவும் இல்லை; சரி, ஒரு20 ரூபாய்க்கு டாப் அப்செய்துவிடுவோம் எனநினைத்து டாப் அப்செய்தேன். இப்போது என்மெயின் பேலன்ஸ் 32ரூபாய். ஆனாலும், அந்தமெசேஜ் வருவதுநிற்கவில்லை. ஏதோடெலிகாம் ஆபரேட்டர்பிரச்னை என நினைத்துஏர்டெல் கஸ்டமர் கேருக்குபோன் செய்தால், “உங்களுடைய வேலிடிட்டிமுடிந்துவிட்டதால்தான்மெசேஜ் வந்திருக்கிறது.ஒன்றும் பிரச்னையில்லை.வேலிடிட்டிக்காக ஸ்மார்ட்ரீசார்ஜ் ஏதேனும் செய்தால்போதும்; சரியாகிவிடும்”என்றனர். “இதென்னபுதிதாக ஸ்மார்ட் ரீசார்ஜ்…இதுவரைக்கும் மெயின்பேலன்ஸ் மட்டும்தானேடாப்அப் செய்தோம்…”என்றால், இரண்டுவாரங்களுக்கு முன்புதான்இந்தத் திட்டம்தொடங்கியிருக்கிறது.இனிமேல் இப்படித்தான்சார்” என்றனர். சரி, அந்தஸ்மார்ட் ரீசார்ஜ்தான்என்னவெனப் போய்பார்த்தால், இதுவரைக்கும்நாம் சிம்மிற்கு செலவுசெய்த விதத்தையேமொத்தமாக மாற்றும்விதமாக இருக்கிறது அதன்விலைப்பட்டியல்.குறைந்தது 35ரூபாயிலிருந்துதொடங்குகிறது இந்தஸ்மார்ட் ரீசார்ஜ். 35ரூபாய்க்கு ரீசார்ஜ்செய்தால் 26.66 ரூபாய்டாக்டைம்; 100 MB டேட்டா.கூடவே 28 நாள் வேலிடிட்டி.இதுதான் இங்கே முக்கியம்.இந்த 35 ரூபாய்க்கு அடுத்த28 நாள் மட்டும்தான்வேலிடிட்டி; அதற்குப்பின்னர் உங்கள் மெயின்பேலன்ஸில் பணம்இருந்தாலும்,இல்லையென்றாலும்மீண்டும் ரீசார்ஜ்செய்யவேண்டும்.இல்லையெனில் நோஅவுட்கோயிங்; நோஇன்கமிங். இந்த ஸ்மார்ட்ரீசார்ஜில் அதிகபட்சவேலிடிட்டியே 84நாள்கள்தான். 245 ரூபாய்பிளான் இது. அதற்குப்பின்னர் மீண்டும் ரீசார்ஜ்செய்யவேண்டும்.இல்லையெனில் மெயின்அக்கவுன்ட்டில் பேலன்ஸ்இருந்தாலும் பயன்படுத்தமுடியாது.

  

அவுட்கோயிங் மற்றும்இன்கமிங் நிறுத்தப்படுவதுதொடர்பாக வரும் மெசேஜ்

 

இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ்இல்லாமல் 5,000 ரூபாய்க்குடாக்டைம் ரீசார்ஜ்செய்தால்கூட, அந்த 5,000ரூபாய் என்பதுடாக்டைம்க்கு மட்டும்தான்லைஃப்டைம் வேலிடிட்டி.அவுட்கோயிங்கிற்கு 28நாள்தான். மீண்டும் 35ரூபாய்க்கு மெயின்பேலன்ஸில் இருந்தோஅல்லது தனியாகவோரீசார்ஜ் செய்யவேண்டும்.அப்போது அந்த 5,000ரூபாயிலிருந்துகழிக்கப்பட்ட 35 ரூபாயில்மீண்டும் 26.66 ரூபாய்மெயின் பேலன்ஸில்சேர்ந்துவிடும். இப்படிஒவ்வொரு மாதமும் பணம்செலுத்தினால் மட்டுமேஇனி இன்கமிங் மற்றும்அவுட்கோயிங். ஒரேஒருமுறை ரீசார்ஜ்செய்துவிட்டு, எப்போதும்இலவசமாக இன்கமிங்சேவையைப்பயன்படுத்தலாம்என்பதெல்லாம் இனிஇல்லை. இந்தப் பிரச்னை.ஏர்டெல்லில் மட்டும்இல்லை.வோடஃபோனிலும்தான்.இந்தத் திட்டத்தை முதலில்கொண்டுவந்ததேவோடஃபோன்தான். சரி,எதற்காக இப்படிச்செய்கிறார்கள் எனடெலிகாம் வட்டாரத்தில்விசாரித்ததில், பல்வேறுவிஷயங்கள்தெரியவந்தன.

 

ஜியோவின் வருகைக்குப்பின்னர் இந்திய டெலிகாம்துறையில் ஏகப்பட்டமாற்றங்கள்நிகழ்ந்துவருகின்றன.அதில் முக்கியமானது பிறடெலிகாம் நிறுவனங்களின்பொருளாதார இழப்பு. இதைஈடுகட்ட முடியாமல்தான்இந்திய தனியார் டெலிகாம்நிறுவனங்களின்எண்ணிக்கை குறைந்துமூன்றாகிப் போனது.இப்போது இந்தியாவில்இருக்கும் முன்னணிடெலிகாம் நிறுவனங்கள்என்றால் ஏர்டெல், ஜியோமற்றும் வோடஃபோன்(+ஐடியா) மட்டும்தான்.இதுதவிர அரசின்பி.எஸ்.என்.எல். தற்போதுஇந்த மூன்று தனியார்நிறுவனங்களுக்குள்தான்கடும்போட்டி. 

இந்தப் போட்டியைச்சமாளிக்க முடியாமல்ஏர்செல், ரிலையன்ஸ்போன்ற நிறுவனங்கள்ஆட்டத்திலிருந்தேவிலகிக்கொண்டன.தற்போது இறுதி ஆட்டத்தில்நிற்பது மொத்தம் மூன்றேநிறுவனங்கள்தாம். இதில்ஜியோ மட்டும்தான் அதன்வசந்தகாலத்தில்இருக்கிறது. மற்ற இருநிறுவனங்களும்ஜியோவின் போட்டியைச்சமாளிக்க முடியாமல்திணறிவருகின்றன.ஒருபக்கம் ஜியோவோ,வாடிக்கையாளர்கள்,வருமானம் எனஇரண்டிலும்வளர்ந்துவருகிறது.ஆனால், பிற இருநிறுவனங்களும்கடுமையான பொருளாதாரநெருக்கடியைச் சந்தித்துவருகின்றன. இந்தியடெலிகாம் துறையில்தற்போது இருக்கும்அளவுக்கு இதற்கு முன்புபொருளாதார அழுத்தம்,கடந்த காலங்களில்இருந்திருக்குமா என்பதுசந்தேகமே! இந்நிலையில்எதைச் செய்தாவதுசந்தையில் தங்களைதக்கவைத்துக் கொள்ளபோராடி வருகின்றன இந்தஇரு நிறுவனங்களும்.

 

ஒருபுறம் 4G, 5G போன்றஎதிர்காலத்தொழில்நுட்பங்களைஅதிகரிக்கவேண்டும்.அதற்கான முதலீடுகளைஅதிகரிக்க வேண்டும்.இன்னொருபுறம்வாடிக்கையாளர்களைஈர்ப்பதற்காகவும்,தக்கவைப்பதற்காகவும்நெட்ஃபிளிக்ஸ், அமேசான்பிரைம் போன்றமதிப்புகூட்டு சேவைகளைவழங்கசெலவுசெய்யவேண்டும்.இந்தக் கூடுதல்பொருளாதாரச் செலவுகள்தவிர்த்து வழக்கமானபணிகளையும்மேற்கொள்ளவேண்டும்.இப்படியொருநெருக்கடியானசூழ்நிலையில் எப்படித்தொடர்ந்து டெலிகாம்நிறுவனங்கள்லாபமின்றியேஇயங்கமுடியும் எனக்கேட்கின்றனஇந்நிறுவனங்கள்.டெலிகாம்நிறுவனங்களுக்குமொபைல்வாடிக்கையாளர்களுக்குநேரடியாக இரண்டுவழிகளில் வருமானம்வருகிறது. ஒன்று,வாடிக்கையாளர்களின்ரீசார்ஜ் செலவு;இரண்டாவது, Mobile Termination Charge (MTC). முதல்விஷயம் அனைவருக்கும்தெரிந்ததே. இரண்டாவதுவிஷயத்தை மட்டும்கொஞ்சம் விரிவாகப்பார்ப்போம்.

 

இந்தியாவில் இன்கமிங்கால்கள் அனைத்துக்கும்2003-ம் ஆண்டுக்குமுன்புவரைவாடிக்கையாளர்களிடம்கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்தது. பின்னர் ட்ராய்இதனை இலவசசேவையாக மாற்றியது.எனவே அவுட்கோயிங்கால்களுக்கு மட்டும் பணம்செலுத்தினால் போதும்.டேட்டா போன்றவைகூடுதல் செலவு. இதில்இன்கமிங் காலைபொறுத்தவரைவாடிக்கையாளர்களுக்குஎந்தக் கட்டணமும் இல்லை.ஆனால், மொபைல்நிறுவனங்கள்தங்களுக்குள் குறிப்பிட்டகட்டணத்தைப்பரிமாறிக்கொள்ளும்.சிறிய உதாரணம் மூலம்பார்ப்போம். ஏர்டெல்வாடிக்கையாளர் ஒருவர்ஜியோ வாடிக்கையாளர்ஒருவருக்கு போன்செய்தால் ஏர்டெல், கால்செய்யும்வாடிக்கையாளரிடமிருந்துகட்டணம்பெற்றுக்கொள்ளும்.

இதுதவிர ஏர்டெல்நிறுவனத்திடமிருந்துவரும்காலை, ஜியோ தன்னுடையவாடிக்கையாளருடன்இணைக்கவேண்டுமென்றால் அதற்குஜியோவும் பணம் கேட்கும்.இதை ஏர்டெல்லிடமிருந்துபெற்றுக்கொள்ளும். இந்தவிதி, பிற நிறுவனங்களின்வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள்நெட்வொர்க்குடன் கனெக்ட்செய்யும் அனைத்துநிறுவனங்களுக்கும்பொருந்தும். இந்தமுறைக்கு Calling Party Paysஎன்று பெயர். இதனைமுற்றிலுமாக எதிர்க்கிறதுஜியோ.



அதாவது, கால்களைகனெக்ட் செய்யும்நிறுவனங்களுக்குப் பணம்தருவதே அவர்களின்நெட்வொர்க்கிற்கானமுதலீட்டைத் திரும்பப்பெறுவதற்காகத்தான்.ஆனால், தற்போதுசந்தையில் இருக்கும்ஏர்டெல், வோடஃபோன்நிறுவனங்கள் தங்கள்முதலீட்டை, இதுவரைபெற்ற லாபம் மூலம்திரும்பப்பெற்றுவிட்டன.எனவே, இந்த MTCகட்டணத்தை முற்றிலுமாகநீக்கவேண்டும் எனட்ராயிடம் சொன்னதுஜியோ. மற்றநிறுவனங்களோ இப்போதுMTC-க்காக பிறநிறுவனங்களிடமிருந்துவசூலிக்கும் கட்டணத்தைநிமிடத்துக்கு 14 பைசாவில்இருந்து 30 பைசாவாகஉயர்த்தவேண்டும் என்றன.இந்த விவாதம் நடந்ததுகடந்த ஆண்டுபிற்பகுதியில். இறுதியில்இதுதொடர்பாக புதுஅறிவிப்பை வெளியிட்டட்ராய், MTC கட்டணத்தை 14பைசாவிலிருந்து 6பைசாவாகக் குறைத்தது.இந்த விதிமுறை கடந்தஆண்டு அக்டோபர் முதலேஅமலுக்கு வந்தது. இதனால்ஜியோ தவிரபிறநிறுவனங்கள் பெரியஅளவில் நஷ்டத்தைச்சந்தித்தன. இந்தப்பிரச்னை ஒருபக்கம்என்றால்,குறைந்துகொண்டே வந்தARPU இந்த நிறுவனங்களைஇன்னும் சிக்கல்படுத்தின.

  

ஒவ்வொருவாடிக்கையாளரும் அந்தமொபைல் நிறுவனத்துக்குஎவ்வளவு ரூபாய் செலவுசெய்கிறாரோ அதுதான்அந்நிறுவனத்தின் ARPU (Average Revenue Per User).இந்த ஆண்டின் இரண்டாம்காலாண்டின் முடிவின்படிஜியோவின் ARPU 135ரூபாய். ஏர்டெல் ARPU 101ரூபாய். இந்த ARPUஜியோவைத் தவிர மற்றநிறுவனங்களுக்குத்தொடர்ந்துகுறைந்துவருகிறது.இதற்குக் காரணம் டேட்டாமற்றும் வாய்ஸ்காலிங்கிற்காகஜியோவையும், இன்கமிங்காலிற்காக மட்டும் ஏர்டெல்மற்றும் வோடஃபோனையும்பயன்படுத்தும்வாடிக்கையாளர்களின்எண்ணிக்கை தொடர்ந்துஅதிகரித்துக்கொண்டேசெல்வதுதான்.உதாரணமாக ஒருவர்ஜியோ மற்றும்வோடஃபோன் என இரண்டுசிம்களைப்பயன்படுத்துகிறார் எனவைத்துக்கொள்வோம்.அவர் டேட்டாவுக்காகஜியோவைத் தொடர்ந்துபயன்படுத்துவார். இதனால்ஜியோவுக்குத் தொடர்ந்துவருமானம் வரும். மேலும்,ஜியோவின் வாய்ஸ் காலும்இலவசம் என்பதால்வாடிக்கையாளருக்குக்கூடுதல் லாபம். இதுபோகபழைய எண்ணாகவோஅல்லது பேக்அப்பிற்காகமட்டும் வோடஃபோனைப்பயன்படுத்துவார்.ஜியோவே இலவசம்தான்என்பதால் தொடர்ந்துஅவுட்கோயிங்சேவைகளையும் அதிலேயேபயன்படுத்துவார். ஆனால்,அதே சமயம் இன்கமிங்சேவைக்காக மட்டும்வோடஃபோன்நெட்வொர்க்கைப்பயன்படுத்துவார். இதுவோடஃபோனுக்குப்பெரியளவில் எவ்விதவருமானத்தையும்ஈட்டித்தராது.

  

ஜியோ

அந்த வாடிக்கையாளர் ஒருமாதத்துக்கு 5 மணி நேரம்மட்டும் இன்கமிங் கால்பேசுகிறார் எனில், (300நிமிடங்கள் * 0.06 பைசா) 18ரூபாய் மட்டுமேவோடஃபோனுக்குப் பிறநிறுவனங்களிடமிருந்துவருமானமாக வரும். வேறுஎவ்வித வருமானமும்வராது. இதுபோன்றவாடிக்கையாளர்களால்வோடஃபோனின் மொத்தARPU குறையும். இந்தக்கதை ஏர்டெல்லுக்கும்பொருந்தும். இப்படி ARPUதொடர்ந்து குறைந்தால்அந்நிறுவனத்தின் லாபம்,பங்கு விலை போன்ற பலவிஷயங்களில் அதுஎதிரொலிக்கும். எனவேஇதுபோன்றவாடிக்கையாளர்களைநீக்குவதே சரி என்றமுடிவைஎடுத்திருக்கின்றனஇந்நிறுவனங்கள்.அதனால்தான் தற்போதுவேலிடிட்டி பேக் என்றபெயரில்வாடிக்கையாளர்களை 28நாள்களுக்கு ஒருமுறைரீசார்ஜ் செய்யச்சொல்லிவற்புறுத்துகின்றன. இந்தப்புதிய முடிவின்மூலம் ஒன்றுவாடிக்கையாளர்கள்அடிக்கடி ரீசார்ஜ் செய்துதங்களைநிலைநிறுத்திக்கொள்ளவேண்டும்.இல்லையெனில்,தொடர்ந்து சிம்மைஅப்படியே வைத்திருந்துடீஆக்டிவேட் செய்துவிட்டுவெளியேறிவிட வேண்டும்.நெட்வொர்க்கில் சுமையாகஇருக்கும்வாடிக்கையாளர்களின்எண்ணிக்கையையும்குறைத்துவிட்டு, மற்றவாடிக்கையாளர்களுக்குச்சிறப்பான சேவையைவழங்கிட முடியும். இதுதான்இந்நிறுவனங்களின்தற்போதைய திட்டம்.

  

மேலும், இதில் இன்னொருசூட்சுமமும் இருக்கிறது.ஜியோவிடம் ஏர்டெல்லும்,வோடஃபோனும் தோற்பதுடேட்டா விலைவிஷயத்தில்தான்.அதனால்தான் டேட்டாஎன்றால் ஜியோவைப்பயன்படுத்திவிட்டு, கால்செய்யவேண்டுமென்றால்மட்டும் இந்நிறுவனங்களைஅதிகம்பேர் நாடுகின்றனர்.இந்த டேட்டா + வாய்ஸ் கால்விகிதத்தைச் சரிசெய்யவும்இந்த வாய்ப்பைப்பயன்படுத்துகின்றனஇந்நிறுவனங்கள்.தற்போதுஇந்நிறுவனங்கள்அறிமுகம் செய்துள்ளஸ்பெஷல் ரீசார்ஜ்பேக்குகள் மற்றும் ஸ்மார்ட்ரீசார்ஜ் பேக்குகளில் டேட்டாமற்றும் வாய்ஸ் கால்இரண்டையும் சமஅளவில்கலந்தே கொடுக்கின்றன.நீங்கள் 35 ரூபாய் கொடுத்துஏர்டெல் ரீசார்ஜ்செய்தால்கூட 100 MB டேட்டாகிடைக்கும். 245 ரூபாய்என்றால், 84 நாள்களுக்கு 2 GB டேட்டா கிடைக்கும்.இதைப் பயன்படுத்திதான்ஆகவேண்டும். இதன்மூலம்டேட்டாவுக்கு ஜியோ,காலிற்கு ஏர்டெல் என்றநிலைமை மாறும் எனநம்புகின்றனஇந்நிறுவனங்கள். இந்தப்புதிய மாற்றத்தால்இதுவரைக்கும் இருந்த 20, 30, 100 ரூபாய் டாப்அப்பேக்குகள் அனைத்தையும்தற்போது இவைநீக்கிவிட்டன. 10 ரூபாய்டாப்அப் மட்டும்தான்இருக்கிறது. அதுவும்மெயின் பேலன்ஸ்மட்டும்தான். வேலிடிட்டிஇல்லை. எனவே காம்போபேக்குகள்தான் இவற்றில்ஒரே வழி.

ஏர்டெல்

 

இந்த மாற்றங்கள்இப்போதுதான் கொஞ்சம்கொஞ்சமாக அப்டேட்ஆகிவருகின்றன. ஏர்டெல்இப்போதைக்கு தமிழ்நாடு,உத்தரப்பிரதேசம் (மேற்கு)மற்றும் பஞ்சாப் ஆகியதொலைத்தொடர்புவட்டாரங்களில் மட்டுமேஇதைஅமல்படுத்தியிருக்கிறது.இங்கே சோதனைமுயற்சிகள் முடிந்தபின்புநாடு முழுவதும்விரிவுசெய்யப்படும்.வோடஃபோனும்இப்போதுதான் இந்தப்பணிகளைஆரம்பித்துள்ளது. இன்னும்சில நாள்களில் பலருக்கும்மேலே பார்த்த மெசேஜ்கள்வரத்தொடங்கலாம். எவ்விதரீசார்ஜ்களும் செய்யாமல்வெறும் மெயின்பேலன்ஸூடன் மட்டும் சிம்கார்டை வைத்திருக்கலாம்என்பது மாறி இனி 28நாள்களுக்கு ஒருமுறைரீசார்ஜ் செய்யவேண்டியநிலைமை வந்திருக்கிறது.எளிமையானவார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால்டெலிகாம் சேவை என்பதுமீண்டும் செலவுமிக்கஒன்றாக மாறியிருக்கிறது.அவ்வளவுதான். சரி, ஜியோஎன்ன செய்யவிருக்கிறது?

  

ஜியோவைப்பொறுத்தவரைஇவையெல்லாம்பிரச்னையே இல்லை.அதற்கு இரண்டுகாரணங்கள். ஒன்று,பலரும் இந்த மாற்றங்கள்பிடிக்காமல் MNP மூலம்ஜியோவுக்கு மாறலாம். அதுசாதகமான அம்சமே.இரண்டாவது, ஜியோஇதுபோல புதிதாக எந்தமாறுதல்களும் தன்னுடையசேவையில் செய்யத்தேவையில்லை. ஜியோமுதல் வருடம் தன்சலுகையை அறிமுகம்செய்தபோதே கட்டணத்தில்தெளிவான திட்டமிடலுடன்களமிறங்கியது.வாடிக்கையாளர்கள் ஜியோடிவி, மியூசிக் போன்றகூடுதல் சேவைகளைஅனுபவிக்கவேண்டுமென்றால், பிரைம்உறுப்பினராகவேண்டுமெனச் சொல்லிஅப்போதே ஆண்டுக்கு 99ரூபாய் வாங்கியது.அதன்பின்பு கட்டணவிவரங்களில் மாறுதல்கள்செய்த ஜியோ, வேலிடிட்டிவிஷயத்தையும்அதற்கேற்ப மாற்றியது.இப்போது ஜியோவாடிக்கையாளர் ஒருவர்ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ்செய்யவேண்டுமென்றால்குறைந்தது 98 ரூபாய்செலவிட வேண்டும்.அப்போதுதான் வாய்ஸ்மற்றும் டேட்டாஇரண்டையும் பெறமுடியும்.இதுவே  ஜியோ போன்என்றால் 49 ரூபாய். இந்தத்திட்டங்கள் ஏற்கெனவேவேலிடிட்டி மற்றும்கட்டணத்தில் சரியாகஇருப்பதால் ஜியோவுக்குப்பெரிய பிரச்னையில்லை.வாடிக்கையாளர்களுக்குத்தான் சிக்கல்கள்காத்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here