ஹால் டிக்கெட்டில் எதுவுமே இல்லை: மாணவர்கள் அதிர்ச்சி

மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்டதிருமங்கலம் உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் எவ்வித விவரமும் இல்லாமல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.மாணவர்கள் கூறியதாவது:

இன்று (நவ.,1) முதலாமாண்டு, நாளை (நவ., 2) இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவருக்கு தேர்வு துவங்குகின்றது. நேற்று இரவு பல்கலை இணையதளத்தில் பதிவு எண்ணை பதிவிட்டு ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்தபோது அதில் மாணவர் பெயர், மையம், பதிவெண், ஆண்டு, பாடம் குறியீடு, புகைப்படம் உள்ளிட்ட எவ்வித விவரமும் இல்லை. தேர்வாணையர் ரவியின் கையெழுத்து மட்டும் இருந்தது.இப்பிரச்னை முதலாமாண்டு மாணவர் சிலருக்கு உள்ளது. இரண்டு, மூன்றாமாண்டு மாணவருக்கு 90 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை உள்ளது.

பல்கலை தேர்வுத்துறை கவனக்குறைவால் மாணவரிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here