காற்று மாசால் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்!

காற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட
குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

காற்று மாசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், வரும் தீபாவளியில் ஏற்படும் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த, பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் வாழும் 15 வயதுக்குட்பட்ட 180 கோடி குழந்தைகளில் சுமார் 93 சதவீத குழந்தைகள், மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இது, குழந்தைகளின் உடல் நிலையையும், வளர்ச்சியையும் தீவிரமாக பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் மட்டும் மாசு நிறைந்த காற்றை சுவாசித்ததால் ஏற்பட்ட சுவாச அழற்சி காரணமாக 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி புள்ளிவிவரமும் வெளியிடப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் நாடுகளில் மட்டும் 100 கோடி குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here