How to Maintain “Credit Card”

 

இன்றைய நிதிநிர்வாகத்தில் பலருக்கும்தவிர்க்கமுடியாதவிஷயமாகிவிட்டது,கிரெடிட் கார்டு. அதைசரியாகப் பயன்படுத்தி,உரிய நேரத்தில்தவணைகளைச்செலுத்துவதன் மூலம் நல்லகடன் வரலாற்றைப்பராமரிக்க முடியும்.

பலரும் ஒன்றுக்கு மேற்பட்டகிரெடிட் கார்டுகளைபயன்படுத்துகிறார்கள்.அது ஒன்றும்பிரச்சினையில்லை.அவற்றை எப்படிஉபயோகிக்கிறோம்என்பதுதான் முக்கியம்.சிலர், தமது செலவுகளைக்கட்டுப்படுத்தும் விதத்தில்,கிரெடிட் கார்டை திருப்பிஅளித்துவிடலாம் என்றுஎண்ணலாம்.

உண்மையாகவே அவற்றைரத்துச் செய்யவிரும்புகிறீர்களா? அல்லதுஅப்படியே பயன்படுத்தாமல்வைத்திருக்கப்போகிறீர்களா? கிரெடிட்கார்டை ரத்துச் செய்வதுசரியான வழியா? அதுநம்மைப் பாதிக்குமா?

இந்தக் கேள்விகளுக்கானவிடைகளை இங்கேகாண்போம்.

கிரெடிட் கார்டை ரத்துச்செய்வது, ‘சிபில்’ எனப்படும்உங்களின் கடன்மதிப்பெண்ணைப்பாதிக்கும் என்றாலும், அது,கிரெடிட் உச்ச மதிப்பு,கார்டை பயன்படுத்தியகாலம், உங்கள் மொத்தகிரெடிட் கார்டு தொகுப்பில்குறிப்பிட்ட கார்டின் விகிதம்போன்ற முக்கியக்காரணிகளைப்பொறுத்தது.

 

உங்கள் கிரெடிட் கார்டுகணக்கை மூடும்போது,உங்களின் மொத்த கடன்வரம்பும் குறையும்என்பதால், கடன்மதிப்பெண்ணும் குறையும்.குறையக்கூடியமதிப்பெண்ணின் அளவு,உங்களின் மற்ற கிரெடிட்கார்டுகளில் உள்ள கடனின்அளவைப் பொறுத்தது.அதாவது, அதிகக் கடன்வரம்புள்ள கார்டை ரத்துசெய்யும்போது, குறைந்தவரம்புள்ள கார்டை ரத்துசெய்வதைக் காட்டிலும்அதிகப் பாதிப்பு ஏற்படும்.

உங்கள் கிரெடிட் கார்டின்பயன்பாடுகள் தொடர்ந்துகண்காணிக்கப்படும்என்பதால், கார்டில்எப்போதும் பாக்கிவைக்காமல்பார்த்துக்கொள்வது, கடன்மதிப்பெண்ணுக்குஉதவியாக இருக்கும்.

குறைந்த அளவு கடனுள்ளகிரெடிட் கார்டை ரத்துசெய்யலாம் என்ற தவறானகருத்து நிலவுகிறது.நீங்கள் கிரெடிட் கார்டைரத்து செய்யவிரும்புகிறீர்களோஇல்லையோ, பாக்கியுள்ளகடனை கட்டியே ஆகவேண்டும்.

அதன் கணக்கை மூடாமல்,பாக்கி கடனை கட்டிமுடித்துவிட்டு அட்டையைப்பயன்படுத்தாமல் அப்படியேவைத்திருந்தாலும் கடன்வரம்பு அப்படியே இருக்கும்.நீங்கள் கிரெடிட் கார்டைரத்துச் செய்தேஆகவேண்டும் என்றால்,அதே அளவு அல்லதுஅதைவிட அதிக வரம்புள்ளகார்டை வாங்காதவரைஉங்களின் ஒட்டுமொத்தக்கடன் வரம்புகுறைந்துவிடும்.

அதிகபட்ச கடன் வரம்பைவைத்திருப்பது எப்போதும்உதவும் என்றாலும், சிலநேரங்களில் கிரெடிட்கார்டுகளை திருப்பிக்கொடுக்கலாம். அதாவது,உங்களால் செலவுசெய்வதை முற்றிலும்கட்டுப்படுத்த முடியாமல்இருந்து, கார்டைபயன்படுத்தும்தூண்டுதலைத் தவிர்க்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here