ஜிகா வைரஸின் அறிகுறிகள்..தடுக்கும் வழிமுறைகள்!


மழைக் காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல்களைப் போன்றது ஜிகா வைரஸ்.

டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் தான் ஜிகா வைரஸையும் பரப்புகிறது. பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தாலும், தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.

ஜிகா வைரஸ் குறித்த சில தகவல்கள்:

* ஜிகா வைரஸ் வெப்பமண்டல காலநிலை உள்ள பகுதிகளில் வேகமாக பரவும்.

* ஜிகா வைரஸ் அறிகுறிகள் 1 வாரத்துக்கு நீடிக்கலாம். ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

* தற்போதைக்கு ஜிகா வைரஸை குணப்படுத்தும் மருத்துவம் கிடையாது.

* கொசுக்கடிக்காமல் பார்த்துக்குக்கொள்வதே மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கையாகும்.

அறிகுறிகள்:

* தலைவலி‌
* முதுகுவலி
* உடல் சோர்வு
* கண் சிவத்தல்
* தடிப்புக்கள்
* மூட்டு வலி
* கண்களுக்கு பின்னால் வலி
* வாந்தி
* தசை வலி

போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல் வந்தவுடனே‌ மருத்துவரை அணுக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பரவும் வழிகள் மற்றும் ஆபத்துக்கள்:

இந்த ஜிகா வைரஸ் பெரும்பாலும் கொசுக்கடி மூலமாகத்தான் பரவுகிறது. இருந்தாலும் ஜிகா வைரஸ் வேறு சில வழிகள் மூலமாகவும் பரவும்.

* தாயிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைக்கு பரவும்.

* செக்ஸில் ஈடுபடுவதன் மூலம்

* வைரஸ் பாதிக்கப்பட்ட ரத்த மாற்றத்தின் மூலமாக அதிகம் பரவிவருகிறது.

தடுக்கும் முறைகள்:
தமிழகத்தில் வெப்பம் அதிகம் என்பதால், ஜிகா வைரஸ் தாக்குதல் குறைவு தான் என கூறப்படுகிறது.

* வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும் * * கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், குழந்தையும் பாதிக்கப்படும் என்பதால் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கண்டறியும் வழிகள்:
ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அனுகிபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கண்டறியலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here