பகுதி நேர ஆய்வுபடிப்புகளில் சேர,கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளதால்,நேர்காணலில் பங்கேற்றஆசிரியர்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர்.

சேலம், பெரியார் பல்கலை,உறுப்பு கல்லூரிகள் மற்றும்இணைவு பெற்றகல்லூரிகளில், பகுதிநேரபிஹெச்.டி., எம்.பில்., ஆய்வுபடிப்புகள் உள்ளன.இவற்றில், அரசு மற்றும்தனியார் பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்கள்படிக்கின்றனர். நடப்புகல்வியாண்டில்,நுழைவுத்தேர்வு மற்றும்நேர்காணல் நடத்தப்பட்டது.இந்நிலையில், பெரியார்பல்கலை கட்டுப்பாட்டில்வரும், சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல்மாவட்டங்களில்பணிபுரியும் ஆசிரியர்கள்மட்டுமே, இதில் சேர முடியும்என, கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளது.இதனால், வேறுமாவட்டங்களிலிருந்து,ஆய்வு படிப்புக்குவிண்ணப்பித்து,நேர்காணலில் பங்கேற்றஆசிரியர்கள்ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, சிலஆசிரியர்கள் கூறியதாவது:வேறுமாவட்டங்களிலிருந்து,தனியார் கல்லூரிகளில்சேர்க்கை நடத்திவிட்டு,ஒருநாள் கூட வகுப்புக்குவராமல், பகுதிநேரஆய்வுப்படிப்பை முடிக்கும்நிலை உள்ளது. தற்போது,நான்கு மாவட்டங்களுக்குள்பணி புரிபவர்கள் மட்டுமே,பகுதி நேர ஆய்வு படிப்பில்சேர முடியும் எனஅறிவித்துள்ளது, பலமுறைகேடுகளை தடுக்கும்.வரவேற்கத்தக்கநடவடிக்கை என்றாலும்,இதுகுறித்து, பல்கலைநிர்வாகம் முன்பேஅறிவிப்பு வெளியிட்டிருக்கவேண்டும்.விண்ணப்பத்தை ஏற்று,நுழைவுத்தேர்வு நடத்தி,நேர்காணலுக்கு பின்,தேர்வு முடிவுக்குகாத்திருக்கும்போதுஅறிவிப்பதால், பலரும் மனஉளைச்சலுக்குஆளாகியுள்ளனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here