முந்துங்கள்! Indian Oil-ல் வேலை; ₹ 50,000/- வரை ஊதியம்…


இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள நிதியுதவி உதவி அதிகாரிகளின் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக தெரிவித்துள்ளது!

விருப்புள்ள தேர்வாளர்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான iocl.com-ல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 10, 2018 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எந்தவொரு பிரிவுகளிலும் (இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மார்க்கெட்டிங், வணிக வளர்ச்சி, குழாய்வழிப்புகள், பெருநிறுவன செயல்பாடு அல்லது கூட்டு நிறுவனங்கள்) பணியமர்த்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அறிவிப்பு படி, விண்ணப்பதாரர்கள் CA / CMA பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியன்று 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். அதேவேலையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் ₹ 50,000/- வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

IOCL Recruitment 2018: சில முக்கிய குறிப்புகள்…

வயது – 30 மிகாமல் இருத்தல் வேண்டும். OBC, SC/ST பிரிவினர்க்கு முறையே 3, 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வின் மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் iocl.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இறுதி நாள் 10.11.2018

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here