நாசா: செவ்வாயில் உயிர் வாழ ஆக்சிஜன் உள்ளது.! கடல் உள்ளது.! நீர்த்தேக்கம் உள்ளது.!

செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் பிரோப்ஸ் மற்றும் ரோவர்கள் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின்படி செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் பல வாழும் உயிரினங்கள் வாழ்ந்த வீடாக இருந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரினங்கள் வாழ்ந்ததற்கான பல ஆதரகங்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.

உயிர் வாழ சாத்திய கூறு

விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த ஆதாரத்தை வைத்து, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான அனைத்துச் சாத்திய கூறுகளும் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆக்சிஜன் அளவு

அண்மையில் நாசாவுடன் ஒருங்கிணைத்த ஜெட் ப்ரொபல்ஷன் லேப் நடத்திய ஆய்வின்படி, செவ்வாய் கிரகத்தின் மணலில் ஆக்சிஜன் இன் அளவு எவ்வளவு இருக்கிறதென்று ஆய்வு செய்யப்பட்டது. செவ்வாய் மணலில் ஆக்சைட்ஸ் மற்றும் நைட்ரைட்ஸ் மற்றும் உயிர் வாழத்தேவையான அனைத்துக் கலவைகளும் இப்பத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் அளவைக் கொண்டு பூஞ்சைகள் மற்றும் பல்செல் உயிரினங்கள் உயிர் வாழ இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உயிரினங்கள் வாழ இயலும்

தற்போது இருக்கும் ஆக்சிஜன் அளவானது, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பூமிப்பந்தில் உயிரினங்கள் உருவாவதற்கு இருந்த ஆக்சிஜன் அளவு தற்போது செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இது நாள் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் எந்த ஒரு உயிரினமும் வாழ்வதற்கு போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி உயிரினங்கள் வாழ இயலும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் தடங்கல்

செவ்வாயில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வில், இரண்டு முக்கிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்வாய் கிரகத்தின் நிலப்பரப்பின் கீழ் ஒரு ஏறி மறைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதற்கு முன்பு அங்கு ஆறுகள் ஓடியதற்கும், செவ்வாயில் உள்ள பாறைகளில் தண்ணீர் தடங்கல் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கடல்

அதேபோல் செவ்வாய் கிரகத்தில், இதற்கு முன்பு கடல் மற்றும் உப்பு நீர்த்தேக்கங்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. தற்பொழுது செவ்வாயின் நிலப்பரப்பில் உப்பு மற்றும் தாதுப்பொருட்களின் தாதுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் நிச்சயம் உயிர் வாழ முடியும்

செவ்வாயில் கிடைத்துள்ள பல ஆதாரங்கள் வைத்து, எதிர்காலத்தில் மனிதர்கள் நிச்சயம் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இன்னும் பலதரப்பட்ட ஆய்வுகளை இந்த ஆண்டில் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here