டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மாணவர்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் தேவை யான முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர் களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப் பதாவது:
தமிழகத்தில் தற்போது பருவ மழை காலம் என்பதால் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங் காமல் பார்த்துக்கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர் களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். மழைநீர் தேங்குவதா லும் சுகாதாரமற்ற குடிநீரைப் பயன்படுத்துவதாலும் ஏற்படக் கூடிய டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதலைத் தவிர்க்க பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் தங்கள்அதிகாரத்துக்கு உட் பட்ட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்க வேண்டும்.
மழைநீர் தேங்கக்கூடாது
தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காதவாறும் நீர்த்தேக்கப் பள்ளங்கள் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், கட்டிடத்தின் மேல்தளத்தில் வெளியேறாமல் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் உடைந்த பொருட்களில் தேங்கும் தண்ணீர் அகற்றப்பட வேண்டும்.குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி, கிணறு ஆகியவற்றை திறந்த நிலையில் இல்லாத வாறு அவற்றை மூடிவைக்க வேண்டும்.
தொற்றுநோய்கள்
பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் தொற்றுநோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு தகுந்த அறி வுரைகள் வழங்க வேண்டும். தேங்கியிருக்கும் நல்ல நீரில்தான் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன என்றும் அக்கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்கள் இருந்தால் சுகா தாரத் துறையினரை அணுகி, குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.பயனற்ற பிளாஸ்டிக் பொருட் கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் இருந் தால் அவற்றில் தேங்கும் தண்ணீர் மூலம், நோய்பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு அபாயம் இருப்பதால் அவற்றை உடனே அப்புறப்படுத்த ஆசிரியர் களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.நோய்கள் பரப்பும் கொசுக்கள்கட்டிடப் பணிகளுக்காக நீண்ட நாட்களாக தொட்டிகளில் நீர் தேக்கி வைத்திருப்பதால் அதன்மூலம் நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் இருப் பதால் தேவையானஅளவுக்கு மட்டும் தண்ணீர் தேக்கி பயன் படுத்திவிட்டு, அப்பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு எப் போதும் சுகாதாரமான குடி நீரையே பயன்படுத்துமாறும் மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, நோய்க் கான அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள் ளுமாறு மாணவர்களுக்கு அறி வுரை வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here