டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க நில வேம்பு குடிநீர்

 டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க நில வேம்பு குடிநீர்
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், தென் மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை, 12 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.குறிப்பாக, குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, வைரஸ் காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளது. எனவே, காய்ச்சலை கட்டுப்படுத்த, பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்தவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனே பெற்றோருக்கும், சுகாதாரத் துறைக்கும் தகவல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் மழை நீர் தேங்கும் வகையில், ஏதாவது குப்பை, கூளங்கள் இருந்தால் அவற்றை அகற்றவும், பள்ளி வளாகங்களை ஆய்வு செய்யவும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவுகளை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here