எனது நீண்ட சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன். என் மனைவி 2017-18 கல்வி ஆண்டில் M.Phil (ஆய்வியல் நிறைஞர்) பயில திட்டமிட்டபோது அதற்காக உயர்கல்வி பயில துறை
முன்அனுமதி பெற விண்ணப்பித்த போது அவருக்கு உயர்கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு கூறப்பட்ட காரணம் அவர் மகப்பேறு விடுப்பில் செல்ல இருப்பதால் அவருக்கு உயர்கல்வி பயில அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஆனாலும் இது குறித்து தெளிவான அரசாணைகள் ஏதும் தெளிவாக இல்லை. இதை தொடர்ந்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் பல்வேறு மனுக்களை தொடர்ந்து அளித்து வந்தேன். அதை தொடர்ச்சியாக தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் மகப்பேறு விடுப்புக்கு முன் ஒரு அரசு பெண்ஊழியர் உயர்கல்வி பயில பெற முறையான அனுமதி பெற்று இருப்பின் அவர் அந்த உயர்கல்வியை மகப்பேறு விடுப்பிலும் தொடரலாம் என்று பதிலளித்துள்ளார். இது எனக்கு கிடைத்த பாதி வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். ஏனெனில் அரசு துறையில் பணியாற்றி வரும் பல பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு முன்னரே உயர்கல்வி பெற விண்ணப்பித்தும் அனுமதி மறுத்துவிட்டனர். என் மனைவிக்கும் இதே நிலைதான்.

மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் ஊழியர்கள் அவர்கள் ஏற்கனவே பயின்றுவரும் உயர் கல்வி சார்ந்த தேர்வுகள் எதுவும் எழுதக் கூடாது என்றும் சில இடங்களை மறுத்து வருகின்றனர். இதனால் அந்த பெண் ஊழியர் அவர் பயின்று வரும் படிப்பை முடிப்பதற்கு நீண்ட வருடங்கள் ஆகிறது. இப்படி மகப்பேறு விடுப்பில் ஏற்கனவே பயந்து வரும் தேர்வுகள் எதுவும் எழுதக்கூடாது என்று கூறியது
தவறு என்று தற்போது பள்ளிக்கல்வி இயக்குநரால் அளிக்கப்பட்டுள்ள பதில் மனுவில் தெளிவாகி உள்ளது.

ஆகையால் எனக்கு கிடைத்த இந்த பதில் மனுவை இந்த சூழ்நிலையில் உள்ள பெண் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தகவலை நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த அரசு பணியில் உள்ள பெண் ஊழியர்கள் மற்றும் மகப்பேறு விடுப்பில் செல்ல இருக்கும் அதேசமயம் உயர்கல்வி பயில விரும்பும் பெண்களுக்கு இச்செய்தியை பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது நோக்கம் என்பது மகப்பேறு விடுப்பிலும் பெண்களுக்கு உயர் கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் மகப்பேறு விடுப்பில் ஒரு உயர் கல்வியை தொடரும் போது அவர் மகப்பேறு விடுப்பு முடிந்து தான் அந்த ஆண்டின் இறுதி தேர்வு எழுதுகிறார்.

உதாரணமாக ஒரு ஆண்டின் ஜூன் மாதத்தில் ஒருவர் மகப்பேறு விடுப்பில் செல்கிறார் என்றால் அவர் மீண்டும் மகப்பேறு விடுப்பு ஒன்பது மாதம் முடிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் மீண்டும் பணியில் சேர்கிறார். இவருக்கு அந்த கல்வியாண்டில் உயர்கல்விக்கான தேர்வு என்பது மே மாதத்தில் தான் நடத்தப்படுகிறது. ஆகையால் இவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு மாத காலத்திற்கு பின்பு தான் தேர்வை எழுதுகிறார்கள். மேலும் முதுகலை அல்லது இளங்கலை படிக்க செல்லும் ஒரு அரசுப் பணியில் உள்ள பெண்கள் அந்த ஒன்பது மாதத்தில் தான் அவர்கள் மகப்பேறு விடுமுறை இருக்கிறார்களே தவிர அதை கடந்த பின் தான் அவர்கள் அந்த ஆண்டுக்கான தேர்வு எழுதுகிறார்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு செல்கிறார்கள். ஆதலால் இவர்கள் மகப்பேறு விடுப்பில் இருக்கும் போது ஒரு உயர் கல்வி பயில அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான் முழு நீதியாகும்.

இதுகுறித்து உரிய அரசாணை வரும் வரை எனது சட்டப் போராட்டம் தொடரும்.

Rajivgandhi
Tiruvannamalai

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here