உங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா?


ஒருவருக்கு ஏற்படும் அதிகபட்ச மோசமான விஷயங்களில் ஒன்று தான் ஸ்மார்ட்போனை தொலைப்பது. ஸ்மார்ட்போனை தொலைப்பதன் மூலம் உங்களது கான்டாக்ட்கள், நீங்கள் அனுப்பிய மெசேஜ்கள், நீங்கள் எடுத்த புகைப்படங்கள், நீங்கள் அதிகம் விரும்பி விளையாடிய கேம் நிலைகள் அல்லது ஃபிட்னஸ் செயலியில் நீங்கள் குவித்து வைத்திருக்கும் புள்ளிகளை இழக்க வேண்டி இருக்கும்.

மேலும் ஸ்மார்ட்போன் இழப்பு மூலம் ஒருவர் தொலைத்த விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும்.

புதிய போன் வாங்கினாலும், உங்களது பழைய மொபைலில் இருந்த தரவுகளை மீட்பது சரியாக இருக்காது. எனினும் முறையான நடவடிக்கைகளை சரியாக எடுக்கும் பட்சத்தில் பெருமளவு தரவுகளை மீட்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இத்துடன் உங்களது தற்போதைய மொபைலில் இருக்கும் தரவுகளை புதிய மொபைலுக்கு அனுப்பிக் கொள்ள இவ்வாறு செய்ய முடியும்.

உங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி?

இதை செய்ய உங்களிடம் இருக்க வேண்டியது க்ளோன்இட் (CLONEit) எனும் ஒற்றை செயலி மட்டுமே. ஆன்ட்ராய்டு சாதனத்தில் இதனை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்களது சாதனம் மற்றும் அதில் உள்ள தரவுகளை க்ளோன் செய்து கொள்ளலாம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளலாம்:

1) முதலில் க்ளோன்இட் செயலியை டவுன்லோடு செய்து அதனை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். க்ளோன்இட் செயலி, உங்களது பழைய மொபைல் மற்றும் புதிய மொபைல் என இரண்டிலும் டவுன்லோடு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

2) அடுத்து செயலியை லான்ச் செய்ய வேண்டும். இரண்டு ஆன்ட்ராய்டு சாதனங்களிலும் செயலியை லான்ச் செய்ய வேண்டும். பின் திரையில் சென்டர் மற்றும் ரிசீவர் என இரு ஆப்ஷன்கள் தெரியும்.

3) நீங்கள் க்ளோன் செய்ய வேண்டிய சாதனத்தில் சென்டர் எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். க்ளோன் செய்யப்பட வேண்டிய சாதனத்தில் ரிசீவர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4) மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தேர்வு செய்ததும், ஸ்கேன் செய்யும் வழிமுறை துவங்கும். இனி சென்டர் சாதனம் ரிசீவர் சாதனத்தை கண்டறியும், அடுத்து திரையில் தோன்றும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

5) சாதனங்களை வெற்றிகரமாக பேர் செய்ததும், வைபை ஹாட்ஸ்பாட் இரண்டு சாதனங்களிலும் ஆக்டிவேட் ஆகும். இனி சில நிமிடங்களில் டேட்டா டிரான்ஸ்ஃபர் துவங்கி, உங்களது அனைத்து டேட்டாவும் மற்றொரு ஆன்ட்ராய்டு சாதனத்திற்கு மாற்றப்படும்.

டாக்டர் ஃபோன்-ஸ்விட்ச் (Dr. Fone-Switch)

வெவ்வேறு இயங்குதளங்களில் இருந்து தகவல்களை பரிமாற்றம் செய்ய இந்த வழிமுறை சிறப்பானதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் கொண்டு ஆன்ட்ராய்டு சாதனங்களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்டில் இருந்து மற்றொரு சாதனத்திற்கு க்ளோன் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

1) முதலில் நீங்கள் செய்ய வேண்டியது டாக்டர் ஃபோன்-ஸ்விட்ச் மென்பொருளை உங்களது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அதனை ஆன்ட்ராய்டு சாதனங்களில் இணைக்க வேண்டும். பின் டாக்டர் ஃபோன் டூல்கிட் லான்ச் செய்ய வேண்டும்.

2) பின் திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் ஸ்விட்ச் எனும் ஆப்ஷன் தெரியும். இதில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் டிடெக்ட் செய்யப்படும்.

3) இதில் ஒன்றை சோர்ஸ் என்றும் மற்றொன்றில் டெஸ்டினேஷன் என்றும் மார்க் செய்ய வேண்டும்.

4) இங்கு நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பும் தரவுகளை கிளிக் செய்ய வேண்டும்.

5) அடுத்து ஸ்டார்ட் டிரான்ஸ்ஃபர் எனும் ஆப்ஷனை கிளிக் செய்து தரவுகளை பரிமாற்றம் செய்ய துவங்கலாம்.

போன் க்ளோன் எனும் செயலி கொண்டும் இதே போன்ற சேவையை பெற முடியும். இது க்ளோன்இட் சேவையை போன்ற பயன்களை கொண்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here