காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கத்திற்கு 7 மதிப்பெண் : ஆய்வில் வினோதம்

மதுரையில் பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு
விடைத்தாளில் எழுதாத பக்கங்களுக்கு குறைந்தபட்சம் ஏழு மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உத்தரவின்பேரில் 6 – 9ம் வகுப்பு அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் திருத்திய காலாண்டு விடைத்தாள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது*

*15 கல்வி ஒன்றியங்களிலும் ஏதாவது ஒரு பள்ளியில் பாடம் வாரியாக வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது*

 *இதில் ஏராளமான தவறுகள் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியடைய வைத்தது.பி.இ.ஓ.,க்கள் கூறியதாவது*

 *பெரும்பாலான விடைத்தாளில் தவறான வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது*

*சில பள்ளிகளில் ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்து மாணவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆசிரியர் விடைகள் சொல்லி கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது*

*ஒரு ஒன்றியத்தில் 8ம் வகுப்பு மாணவர், வரைபடத்தில் ‘டில்லி’யை வேறு மாநிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கும் 2 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது*

 *மற்றொரு ஒன்றியத்தில், எதுவுமே எழுதாத பக்கங்களுக்கும் குறைந்தபட்சம் ஏழு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன*

*பார்டரில்’ தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவரின் விடைத்தாளில், இரண்டு மதிப்பெண் வினாவிற்கு நான்கு மதிப்பெண் அளிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது*

*ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டால், ‘ஆல் பாஸ்’ போட வேண்டுமென்றால் இதுபோல் ஏதாவது ஒரு இடத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டியுள்ளது’ என தெரிவித்தனர், என்றனர்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here