ஜியோ தீபாவளி ஆப்பர்..!! 1 வருடத்திற்கு இலவசம்; 100% கேஸ்-பேக் திட்டம்ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சார்பாக, “இந்த தீபாவளிக்கு சலுகை பெற்று அடுத்த தீபாவளி வரை நன்மைகளை அடையுங்கள்” என்ற வகையில் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜியோ வழங்கியுள்ள புதிய திட்டத்தை பற்றி பார்ப்போம்.

இந்த புதிய திட்டத்தை கீழ் ரூ.1699 ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் (உள்ளூர்/ வெளியூர்) பெறலாம். மேலும் இந்த திட்டதின் மூலம் 100% கேஸ்-பேக் பெறலாம். இதில் மூன்று ரூ.500 கேஸ்-பேக் கூப்பன் மற்றும் ரூ 200-க்கான ஒரு கேஸ்-பேக் கூப்பன் கிடைக்கும். அதாவது ரூ.1699 ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1700 கேஸ்-பேக்காக கிடைக்கும். இந்த கேஸ்-பேக் வவுச்சர் இந்த வருடம் டிசம்பர் 2018 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இதில் தினம் 100 குறுஞ்செய்தி அனுப்பலாம். ஒரு வருடத்திற்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா என மொத்தம் 547 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த சலுகை இன்று(அக்டோபர் 18) முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும்.

இது தவிர ரிலையன்ஸ் ஜியோவின் மற்ற திட்டங்களும் 100% கேஸ்-பேக் வழங்கப்படுகிறது. அதில் ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.449, ரூ.799, ரூ.999, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 திட்டங்களும் அடங்கும்.

எந்த திட்டத்திற்கு எவ்வளவு கேஸ்-பேக் கூப்பன் வழங்கப்படுகிறது என்பது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here