திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்

திருநீற்றுப்பச்சை முழுத்தாவரமும் விறுவிறுப்பான சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, வியர்வை பெருக்கியாகவும், தாதுவெப்பத்தை அகற்றி உடலைத் தேற்றவும் பயன்படும்.

இது பொதுவாக, சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

இதன் இலை எண்ணெயிலிருந்து கற்பூரம் போன்றதொரு வாசனைப் பொருள் தயாரிக்கப்படுகின்றது. இதன் விதைகள் (சப்ஜா விதை) சீதபேதி, வெள்ளைபடுதல், இருமல், மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணமாக்கவும், சிறுநீரைப் பெருக்கவும், பயன்படுகின்றன.

திருநீற்றுப்பச்சை அதிகமான மணமுடைய, வெளிறிய கருஞ்சிவப்பு நிறமான, பருத்த பூங்கொத்துக்களையுடைய குறுஞ்செடி வகைத் தாவரம். 1மீ வரை உயரமானவை. மலர்கள், இள மஞ்சள் நிறமானவை, அடர்த்தியான உரோமங்கள் காணப்படும். விதைகள் ஈரமான நிலையில் பசைப்பொருள் கொண்டவை.

இதற்கு கற்பூரத் துளசி, பச்சிலை, உருத்திரச் சடை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. இயற்கையாகவே இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் மற்ற இடங்களிலும் பயிராகின்றது. தென் தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகின்றது.

திருநீற்றுப்பச்சை இலை, விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டவை. விதைகளுக்குச் சப்ஜா விதை, ஷர்பத் விதை போன்ற பெயர்களும் உண்டு. இவை, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

கால் ஆணி குணமாக பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து, அரைத்த இலைகளை, அந்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

கட்டிகள் உடைய தேவையான அளவு இலைகளை அரைத்து கட்டியின் மீது பூச வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம் 3 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சை இலைச்சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

இருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.

வெள்ளைபடுதல் குணமாக  இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

தலைவலி குணமாக திருநீற்றுப்பச்சை இலையை கசக்கி மணத்தை நுகர வேண்டும்.
வாய்ப்புண் குணமாக 4 திருநீற்றுப்பச்சை இலைகளை வாயிலிட்டு மென்று சாற்றை விழுங்க வேண்டும்.

வாய்ப்புண் குணமாக 4 திருநீற்றுப்பச்சை இலைகளை வாயிலிட்டு மென்று சாற்றை விழுங்க வேண்டும்.

வாந்தி கட்டுபட இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, 100 மிலி வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

வயிற்று கடுப்பு, இரத்த கழிசல் குணமாக ஒரு தேக்கரண்டி திருநீற்றுப்பச்சை விதையை, ஒரு டம்ளர் நீரில் போட்டு 3 மணிநேரம் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.

தேள்கொட்டு வீக்கம், குடைச்சல் குணமாக  இலைகளை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும்.

பிரசவ வலியுள்ள பெண்களுக்கு திருநீற்றுப்பச்சை இலைச்சாறு 4 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுத்து வலியைக் குறைக்கலாம். பிரசவத்தை எளிதாக்கலாம். பிரசவித்த பின்னர் ஏற்படும் களைப்பைப் போக்க ஒரு தேக்கரண்டி அளவு திருநீற்றுப்பச்சை விதைகளை ஒரு டம்ளர் நீரில் இட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து உள்ளுக்கு கொடுக்கலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here