தேர்வுக்குத் தயாரா? – பயிற்சியில் வசப்படும் ஆங்கிலம் (பிளஸ் 2 ஆங்கிலம்)

பிளஸ் 2 ஆங்கிலம் பாடத்தைப் பொறுத்தவரை, புதிய வினாத்தாளின் அமைப்பு மாணவர்களின் தேர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கிறது. ஆனால், இப்பாடத்தில் அதிக மதிப்பெண்களைப் பெற மாணவ மாணவிகள் கடினமாக உழைத்தாக வேண்டும்.
90 மதிப்பெண்களுக்கான ஆங்கில வினாத்தாள் Section A,B,C,D என 4 பகுதிகளாக உள்ளதால் அதன் அடிப்படையிலே பார்ப்போம்.
வினாத்தாளில் இருந்து பயிற்சி
Section A: வினாத்தாளின் தொடக்கமாக வரும் இப்பகுதி ஒரு மதிப்பெண்ணுக்கானது. மொத்தம் 20. உரைநடையின் 6 பாடங்களில் இருந்து Synonym, Antonym ஆகியவற்றைப் படித்தால் தலா 2 மதிப்பெண்களைப் பெறலாம். இதற்கு முந்தைய ஆண்டுகளின் வினா வங்கியைப் பயிற்சி செய்தால் போதும்.
அதேபோன்று Abbreviation, Acronyms, Singular and Plural, Compound words, Clipped words, Blended words, Idioms, Definition of the term, Syllabification, Prefix and Suffix, Study skills ஆகியவற்றைக் கொண்டு Multiple choice வினாக்களாகக் கேட்கப்படும். கடந்த ஆண்டைப் போலச் சொந்த வாக்கியங்களில் விடை எழுத வேண்டிய அவசியம் இப்போது இல்லை. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதினாலே போதும். அந்த வகையில் இப்பகுதியைப் பொறுத்த அளவில் புதிய வினாத்தாள் மாதிரி எளிமையானதாகும்.
Section B: Poem மற்றும் Grammar சார்ந்த வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இரண்டு பகுதியையும் உள்ளடக்கிய 2 மதிப்பெண்களுக்கான 10 வினாக்களில் 7-க்குப் பதிலளிக்க வேண்டும். இவற்றில் poem பகுதி 6-ல் 4 வினாக்களுக்கும், Grammar பகுதி 4-ல் 3-க்கும் விடையளிப்பதாக உள்ளது. Poem பகுதி Appreciation மற்றும் Poetic Lines வகையாக அமைந்திருக்கும். பாடநூலின் 6 Poemகளில் தொடர்ச்சியான எவையாவது 5 Poemகளைப் படித்தாலே இப்பகுதிக்கான முழு மதிப்பெண்களைப் பெறலாம்.
Poem பகுதியின் Meanings for new words, Poetic devices ஆகியவற்றைப் படிப்பது அவசியம். Grammar பகுதி வினாக்களுக்குச் சரியாகப் பதிலளிக்கப் பாடநூலின் பயிற்சி வினாக்களைப் பார்த்துவருவதுடன் பருவத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, மாதிரி வினாத்தாள்கள் மற்றும் திருப்புதல் வினாத்தாள்களில் நன்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
Section C: இப்பகுதி ERC, Prose வினாக்கள், Writing Competency ஆகிய 3 உட்பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. தலா 3 மதிப்பெண்களுடனான ERC வினாக்களில், கேட்கப்பட்ட 3-லிருந்து 2-க்குப் பதிலளிக்க வேண்டும். இதில் Poem, அதை எழுதிய கவிஞர் பெயர் ஆகியவற்றை எழுதினாலே 2 மதிப்பெண்கள் உறுதி. பாடலின் கருப்பொருளைப் புரிந்து வைத்திருப்பதன் மூலம் உரிய விளக்கம் எழுதி மீதமுள்ள 1 மதிப்பெண்ணைப் பெறலாம்.
இதேபோன்று Prose வினாக்கள் 3-ல் 2-க்குப் பதில் அளிக்க வேண்டும். பாடநூலின் 6 உரைநடைகளில் தொடர்ச்சியாக அமைந்த எவையேனும் 4 பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் இப்பகுதிக்கு விடையளித்து விடலாம். இதையே முதல் 4 அல்லது கடைசி 4-ஆக எளிமையாகப் பிரித்தும் படிக்கலாம்.
Writing Competency சார்ந்த மூன்றாம் உட்பிரிவில் Road Map, Inference about the Data, Describing the Process, Product Slogans உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இப்பகுதி வினாக்களுக்கு உரிய format-ல் விடை அமைப்பதுடன், மாதிரி, இதர வினாத்தாளில் இருந்து பயிற்சி பெறுவதும் அவசியம்.
கடினமானதைத் தவிர்க்கலாம்
Section D: தலா 5 மதிப்பெண்கள் என 7 வினாக்களுக்கு விடையளிப்பதாக இப்பகுதி உள்ளது (வினா எண்:41-47). வினா எண்கள் 41, 42 ஆகியவை முறையே Prose, Poem பகுதிக்கான Paragraph வினாக்கள் ஆகும். இவை இரண்டுமே கொடுக்கப்பட்ட 2-ல் இருந்து ஒன்றுக்கு விடையளிக்கும் ‘Either or’ வினாக்களாகும்.
புளூ பிரிண்ட் இல்லாததால் அனைத்துப் பாடங்களையும் படிப்பது Paragraph வினாக்களில் முழு மதிப்பெண் பெற உதவும். கடினமாகக் கருதுபவர்கள் Prose பகுதியின் 6 பாடங்களில் தொடர்ச்சியாக அமைந்த எவையேனும் 5 பாடங்களைப் படிக்கலாம். சிலர் 4-வது பாடத்தைக் கடினமாகக் கருதுவார்கள். அவர்கள் அதைத் தவிர்த்து ஏனைய 5 பாடங்களில் கவனம் செலுத்தலாம்.
இதே போன்று Poem பகுதியில் 3-வது பாடலின் வினாக்களைக் கடினமாகக் கருதுவர்கள் ஏனைய பாடல்களில் கவனம் செலுத்தலாம். வினா எண் 43 Supplementary Reading பகுதிக்கானது. கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு Paragraph எழுதுவதாக இந்த வினா அமைந்திருக்கும். துணைப் பாடப் பகுதியின் 7 பாடங்களில் எவையேனும் 6 படித்து, இப்பகுதிக்குத் தயாராகலாம்.
முழு மதிப்பெண்ணுக்கு பயோடேட்டா
Paragraph எழுதும்போது நிறைவாக அறிஞர் பெருமக்களின் மேற்கோள்கள் ( Quotation), Moral of the story ஆகியவற்றை எழுதுவது முழு மதிப்பெண்ணை உறுதி செய்யும்.
வினா எண். 44, சுருக்கி எழுதுதல் (Summary Writing) அல்லது குறிப்பு எழுதுதல் (Note making) ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை எழுதுவதாக அமைந்திருக்கும். Note Making பகுதிக்கு main topic மற்றும் sub topic அவசியம். Hints போல எழுதுவது கூடாது. Rough copy, Fair copy மற்றும் Title ஆகியவை Summary Writingல் அவசியம். இந்த மூன்றையும் எழுதியே 3 மதிப்பெண்களை உறுதி செய்யலாம் என்பதால், இப்பகுதியை (வி.எண்.44) கடினமாகக் கருதும் மாணவர்கள் எளிமையான Summary Writing வினாவுக்கே விடையளிக்கலாம்.
வினா எண் 45 Bio-data / Resume / CV அல்லது paragraph எழுதுவதாக உள்ளது. Paragraphஐவிட, பயோடேட்டா எழுதுவது முழு மதிப் பெண்ணைப் பெற உதவும். இதற்கு பயோடேட்டாவுக்குரிய Format-ல் எழுதிப் பயிற்சி பெறுவது அவசியம்.
வி.எண் 46, Error spotting அல்லது Homophone எழுதுவதாக அமைந்திருக்கும். இந்த இரண்டில் முதலாவது மாணவர்களுக்கு நன்கு பரிச்சயமானது என்பதால் எளிமையாகவும் இருக்கும். இதற்குப் பாடநூலின் இலக்கணப் பகுதியில் தேர்ச்சியும் முந்தைய ஆண்டு வினாக்களில் இருந்து திருப்புதலும் மேற்கொள்ளலாம். உரிய Format-ல் எழுதுவது அவசியம். Covering Letter எழுத அவசியமில்லை. Homophones தேர்வு செய்பவர்கள் புத்தகத்தின் பயிற்சி வினாக்களில் அதிகம் திருப்புதல் மேற்கொள்ள வேண்டும்.
வி.எண் 47, Register type Question அல்லது Comprehension இடம்பெறு கிறது. இந்த இரண்டில் முதலாவது எளிமையானது; சுவாரசியமானதும் கூட. இதற்குத் தினசரி ஆங்கிலச் செய்தித்தாள் வாசிப்பது, பல்வேறு துறை தொடர்பானவற்றைக் குறிப்புகள் எடுப்பது உதவும். Comprehension பகுதிக்கு விடையளிப்பதாக இருந்தால், கொடுக்கப்பட்ட பத்தியைப் பொறுமையாகப் படித்துப் புரிந்து கொண்ட பின்னரே விடையளித்துப் பழக வேண்டும்.
தேர்ச்சி எளிது
புதிய வினாத்தாளில் அமைப்பில் வழக்கமான ‘புளூ பிரிண்ட்’ கிடையாது என்பதால், பாடநூலின் அனைத்துப் பகுதிகளையும் மாணவர்கள் கவனமாகப் படிப்பது அவசியம். படித்ததை எழுதிப் பார்ப்பதும் உரிய திருப்புதல்களைத் தொடர்வதும் மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கும். தேர்ச்சி குறித்துத் தயக்கமுள்ளவர்கள், கீழ்க்கண்ட பகுதிகளில் கூடுதல் கவனம் தரலாம்.
Poem பகுதியின் ERC, Appreciation வினாக்கள், Road Map, Identifying field Registers, Bio-data ஆகியவற்றுடன் ஒரு மதிப்பெண் பகுதியிலிருந்து 15 மதிப்பெண்கள் ஆகியவற்றை குறிவைத்துப் பெறமுடியும். இவற்றுடன் வினாத்தாளின் அனைத்துப் பகுதிகளுக்கும் விடை எழுதுவதுடன், சிறுவினாக்கள், பாராகிராஃப் ஆகியவற்றையும் ஓரளவுக்கு நிறைவு செய்தால் முழு மதிப்பெண்ணான 90-ல், 45க்கு குறையாது பெற்றுவிடலாம்.
ஆங்கிலப் பாடத்துக்கான அவசியக் குறிப்புகளை வழங்கியவர்
க. ரமேஷ்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் மாநிலக் கருத்தாளர் (ஆங்கிலம்),
மதுரை.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here