டெங்குவை கட்டுப்படுத்தி டெங்கு இல்லாத தமிழ்நாடாக மாற்ற உதவிடுங்கள். *

டெங்கு  Flavivirus  வகை வைரஸால் பரவுகிறது*.இதில் DEN-1,DEN-2,DEN-3,DEN-4 என்ற நான்கு 
வகையில் உள்ளது.
*இது ஏடிஸ் வகை பெண் கொசுவினால் பரவுகிறது*.
இந்த வகை கொசுவின் சிறப்பு இது இருட்டில் வாழும், *பகலில் கடிக்கும்*.சூரிய ஒளியில் இது வாழாது,மறைவான இடங்களில் தான் இருக்கும்,உங்களது வீட்டில் துணியை வாரம் ஒரு முறை மூட்டை கட்டி வைத்து துவைக்கிறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் இந்த கொசு கண்டிப்பாக இருக்கும். *நல்ல தண்ணீரில் வாழக்கூடிய கொசுவானது* தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் ஓரங்களில் முட்டை இடும்.வைரஸால் பாதிக்கப்பட்ட கொசு முட்டை இட்டு குஞ்சு பொரித்து வரும் கொசுவானது வைரஸ் தொற்று பாதிப்புடனேயே வரும்.தண்ணீர் வற்றி இருந்தாலும் எப்போது மழை பெய்கிறதோ அல்லது தண்ணீர் ஊற்றி வைக்கிறோமோ உடனே கொசு முட்டை வளர ஆரம்பித்து விடும்.எனவே பாத்திரத்தை கவுத்தி வையுங்கள்.
*இதன் அறிகுறிகள்:*

*அதிக காய்ச்சல்,பயங்கரமான தலைவலி,வாந்தி வரும் அறிகுறி,வாந்தி,நிணநீர் குழாய்களில் வீக்கம்,தசை  மற்றும் மூட்டுகளில் வலி,தோலில் தடிப்புகள்.*

இதில் மோசமான நிகழ்வு காய்ச்சல் குறைந்த உடன் ஆரம்பமாகும். *இந்த வைரஸ் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை குறைப்பதால் இரத்த பிளாஸ்மா தானாகவே வெளியேறும்* ,மூச்சுத்தினறல் ஏற்படும்.இரத்தம் வயிற்றின் உள்ளே வெளியேறும்,கடுமையான வயிறுவலி ஏற்படும்.அதிக இரத்த இழப்பு கண்ணுக்கு தெரியாமல் ஏற்படுவதால் உள்ளுறுப்புகள் திடீரென செயல்
இழக்க வாய்ப்பு ஏற்படும்.காய்ச்சல் குறைந்த மூன்று அல்லது ஏழு நாட்களில் நடைபெற வாய்ப்பு உண்டு.எனவே *காய்ச்சல் குறைந்து விட்டது என்று கவனக் குறைவாக இருந்தால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.*
காய்ச்சலுக்கு பின் தோன்றும் அறிகுறிகள்:
கடுமையான அடிவயிற்றுவலி
கடுமையான வாந்தி
மூச்சு விடுவதில் சிரமம்
இரத்தம் வரும் எளிறுகள்
இரத்த வாந்தி
போன்ற அறிகுறிகள் தோன்றும்.

*அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவ சிகிச்சை சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம்*.

*டெங்குவைத் தடுத்திட,,,,,*

இதனை தடுக்க *தண்ணீரை நீண்ட நாள் தேக்கி வைத்து அதில் கொசுப்புழு உருவாக வாய்ப்பினை ஏற்படுத்தாதீர்கள்.குறைந்தது வாரம் ஒருமுறையாவது தண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை கழுவி கவுத்தி வையுங்கள்,இதன் மூலம் கொசுப்புழு உருவாவதை தடுக்க முடியும்.* வசதியானவர்கள் வீடுகளில் ஏசி,பிரிட்ஜ் போன்றவற்றில் வடியும் தண்ணீரை அவ்வப்போது வெளியேற்றுங்கள்,இதன் மூலம் கொசுபுழு உருவாவதை தடுக்கவும் டெங்கு,சிக்கன் குனியா வருவதை தடுக்கவும் முடியும்.இந்தவகையான *கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க அபேட் என்ற மருந்து தண்ணீரில் விடப்படுகிறது*.வளர்ச்சியடைந்த கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கப்படுகிறது.அதிக காய்ச்சல் உள்ள பகுதிகளில் வீடுகளின் வெளிப்புறம் மட்டும் அல்லாமல் வீட்டின் உள்ளேயும் கொசுப்புகை அடிக்க வேண்டும்,அவ்வாறு *உள்ளாட்சி பணியாளர்கள் வரும் போது அதற்கு ஒத்துழையுங்கள்.*

*தொழில்நிறுவனங்கள் தங்களது தண்ணீர் தொட்டிகளில் *கம்பூசியா போன்ற மீன்களை வளர்ப்பதன் மூலம் கொசுப்புழு உருவாவதை தடுக்க முடியும்.*
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக ஊராட்சி பணியாளர்கள் வரும்போது உங்களது வீடுகளில் கொசுப்புழு கண்டறிந்தால் அந்த தண்ணீரை கீழே கொட்டி அந்த பாத்திரத்தை கவுத்தி வைக்க அனுமதியுங்கள். *தேங்காய் சிரட்டை,டயர் ,பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் மழை நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.இல்லையென்றால் கொசுப்புழு உருவாக வாய்ப்பு ஏற்படும்.வீடுகளின் பின்புறங்களில் தேவையற்ற குப்பைகள் தேங்குவதை தவிர்த்திடுங்கள்.*

*நமது சுகாதாரம் நமது கையில்.நாம் வசதியாக இருக்க நோயில்லாத வாழ்க்கை தேவை.இந்த வியாதி வந்தால் குறைந்த பட்சம் சில லட்சங்களை வாங்கி கொண்டு தான் குணமாகிறது.எனவே ” நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” என்று வாழ டெங்கு இல்லாத சமுதாயம் அமைக்க உதவுங்கள்…..*

*டெங்குவை ஒழிக்க யாவரும் கரம் கோர்ப்போம்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here