அப்துல்கலாம் பிறந்த நாளில் பள்ளி வளாகத்தில் பி.எஸ்.எல்.வி செயற்கைக்கொள் மாதிரி அமைத்த கவரப்பட்டி அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் பாராட்டு..

 

விராலிமலை,அக்.15: அப்துல்கலாம் பிறந்த நாளில் பி.எஸ்.எல்.வி செற்கைகோள் மாதிரி அமைத்த கவரப்பட்டி அரசுப் பள்ளியை பொதுமக்கள் பாராட்டினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 87 ஆவது பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது..

முக்கிய நிகழ்வாக டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் மாதிரியானது பள்ளித்தலைமையாசிரியர் முயற்சி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாலும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு பள்ளிக்கு அர்ப்பணிக்கப்பட்டது..

இது குறித்து பள்ளித்தலைமைஆசிரியர் சிவக்குமார் கூறியதாவது: மாணவர்கள் மத்தியில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டும் நோக்கத்திலும்,சாதாரண நிலையில் இருந்து ஒரு பி.எஸ்.எல்.வி செயற்கைகோளை இயக்கும் நிலைக்கு உயர்ந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உழைப்பு,விடாமுயற்சி,தன்னம்பிக்கை ,நேர்மை ஆகியவற்றை மாணவர்களின் மனதில் விதைக்கும் கருவியாக பி.எஸ். எல்.வி மாதிரி இப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது..மேலும் இது அமைக்கப்பட்டதன் நோக்கமே கவரப்பட்டி அரசுப் பள்ளியிலும் பல அப்துல்கலாம்கள் உருவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் என்றார்.

விராலிமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் மாதிரி அமைப்பினை திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் புகைப்படத்திற்கு சிறப்பு விருந்தினர்,பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் ,மாணவ,மாணவியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஊர்ப்பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் மாதிரி அமைப்பினை ஏற்படுத்திய கவரப்பட்டி தலைமைஆசிரியர்,ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களை பாராட்டிச் சென்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here