பள்ளி காலை வழிபாடுசெயல்பாடுகள்:

திருக்குறள்:66

குழல்இனிது யாழ்இனிதுஎன்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

உரை:

தம் மக்களின் மழலைச்சொல்லைக் கேட்டு அதன்இனிமையை நுகராதவரேகுழலின் இசை இனியதுயாழின் இசை இனியதுஎன்று கூறுவர்.

  

பழமொழி :

Civility costs nothing

குற்றங்குறைகளால்எதையும் சாதிக்க முடியாது

பொன்மொழி:

நல்ல வாழ்க்கைநடத்துவதற்கு நல்லபண்புகளை முறையாகப்பெற்றிருக்க வேண்டும்.

– வில்லியம் பிளேக்

  

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடையவாழ்நாளில் யாருடையஉடலுக்கும் மனதிற்கும்துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்குஎன்னால் முடிந்தஉதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் முதல்பேசும் படம் என்ன?

ஆலம் ஆரா (1931)

2.இந்தியாவின் முதல்சோதனைக் குழாய்குழந்தை யார்?

குழந்தை: ஹர்ஷா,வளர்த்தவர்: இந்திரா

  

நீதிக்கதை

மூன்று மீன்களின் கதை!

அதிக மேடோ, பள்ளமோஇல்லாத இடத்தில் நீர்நிறைந்த ஒரு குட்டைஇருந்தது, அந்தக்குட்டையில் அதிகமானமீன்கள் இருந்தன.

அவற்றுள் மூன்று மீன்கள்நட்புடன் இருந்தன.

அந்த மூன்று மீன்களுள்ஒன்றுமுன்னெச்சரிக்கையுள்ளமீன், இன்னொன்றுசமயத்திற்கேற்றபடி நடந்துகொள்ளக் கூடியது.மூன்றாவது புத்திகுறைவானது.

ஒருநாள் மீன்பிடிப்பவர்கள்அந்தக் குளத்திற்கு வந்துபார்த்தனர். அந்தக்குட்டையிலிருந்தமீன்களையெல்லாம் பிடித்துவிட வேண்டும் எனதிட்டமிட்டனர்.

அவர்கள் அந்தக்குட்டையின் நான்குபகுதிகளிலும் வடிகாலைவெட்டி விட்டனர்.

இதனால் அந்தக்குட்டையிலிருந்த தண்ணீர்வடிந்து வெளியேறிக்கொண்டிருந்தது.

குட்டையிலிருந்த நீர்குறைந்து கொண்டேசெல்வதைப் பார்த்தமுன்னெச்சரிக்கையுள்ளமீன், “குட்டையில் நீர்குறைகின்றது. இது ஆபத்துவரப்போவதைக்காட்டுகிறது. அதற்குள் நாம்எப்படியாவது வேறு ஒருநீர்நிலைக்குப் போய்விடலாம். முன்கூட்டியேவரவிருக்கும்ஆபத்திலிருந்து தப்பிக்கும்வழியைக் கண்டவன்பின்னர் மகிழ்ச்சியுடன்வாழ்வான்” என்றது.

அந்த மீனின் பேச்சைக்கேட்ட புத்தி மந்தமான மீன், “ஆபத்து வரும் என்று நான்நினைக்கவில்லை.அவசரப்பட்டு,நெடுநாட்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக்குட்டையை விட்டுவெளியேற எனக்குமனமில்லை.” என்றது.

இந்த இரு மீன்களின்பேச்சையும் கேட்டசமயோசித புத்தியுள்ள மீன், “ஆபத்து வரும் போதுஅதற்கேற்றபடி ஏதாவதுசெய்து தப்பித்துக்கொள்ளலாம்” என்றது.

முன்னெச்சரிக்கையுள்ளமீன் வடிகால் மூலம்வெளியேறிக்கொண்டிருந்த நீருடன்போய் வேறொரு நீர்நிலையில் வாழத்தொடங்கியது.

மறுநாள், மீன்பிடிப்பவர்கள்வந்தனர்.

நீர் ஓரளவுவடிந்திருப்பதைப்பார்த்துவிட்டு,குட்டையிலிருந்தமீன்களைப் பிடிக்கத்தொடங்கினர்.

மந்தப் புத்தியுள்ள மீன்மாட்டிக் கொண்டது. பிடிபட்டமீன்கள் அனைத்தையும்கயிற்றினுள் கோர்த்துஅருகே இருந்த சிறுபாறையின் மேல்வைத்தனர்.

இதைப் பார்த்த சமயோசிதமீன் தானாகவேபிடிக்கப்பட்ட மீன்கள்கோர்க்கப்பட்டிருந்தகயிற்றைக் கவ்விப்பிடித்துக் கொண்டது.

குட்டையிலிருந்தமீன்களைப் பிடித்தமகிழ்ச்சியில் அவர்கள்அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் அடுத்திருந்தநீர்நிலையில் தாங்கள்கயிற்றுள் கோர்த்துவைத்திருந்த மீன்களைக்கழுவுவதற்காக நீரில் முக்கிஎடுத்தனர்.

அப்போது கயிற்றைக்கவ்விக் கொண்டுதொங்கிய சமயோசிதபுத்தியுள்ள மீன்அவர்களுக்குத்தெரியாமலேயேதண்ணீருக்குள் போய்தப்பியது.

மந்தப் புத்தியுடைய மீனின்நிலைமை அவ்வளவுதான்.முன்னெச்சரிக்கையும்,சமயோசிதமாக நடக்கும்புத்தியுள்ள மீன்கள் தப்பின.

வாழ்க்கையில்முன்னெச்சரிக்கையும்,சமயோசிதபுத்தியுமுடையவர்கள் சுகவாழ்வடைவார்கள்.

  

இன்றைய செய்தி துளிகள்:

1.6 முதல் 8ம் வகுப்புவரையிலான மாணவமாணவியர்களுக்குவிலையில்லா டேப் -அமைச்சர்செங்கோட்டையன்

2.அரசு பள்ளிமாணவர்களுக்கு நவீனஅடையாள அட்டை வழங்கதமிழக அரசு அரசாணைவெளியீடு!

3.மதுரை எய்ம்ஸ்மருத்துவமனைக்கு பிரதமர்மோடி விரைவில் அடிக்கல்:அமைச்சர் விஜயபாஸ்கர்தகவல்

4.தாம்பரம் – நெல்லைஇடையே ‘சுவிதா’சிறப்புரயில் வரும் 17ம் தேதிஇயக்கப்படும்: தெற்குரயில்வே

5.இளையோர் ஒலிம்பிக்போட்டி பெண்கள்ஹாக்கியில் இந்தியாவெள்ளி பதக்கம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here