*ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)-வேலை நிறுத்த ஆயத்த மாநாடு-பங்கேற்பீர்-நம் உரிமையை வெல்வீர்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*ஜாக்டோ-ஜியோ, 32 மாவட்டங்களில் பணிபுரிகின்ற போர்குணம் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் 2018 அக்டோபர் 13 சேலம் வேலை நிறுத்த ஆய்த்த மாநாடு. வெற்றியை பரிசாக வழங்கும் மாநாடு. மீண்டும் மிக சக்தியான காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவிக்க இருக்கின்ற மாநாடு.ஊதிய மாற்றத்தை பெற்ற தந்த தலைவர்களை உரைவீச்சு கொண்ட மாநாடு* *உடலை வறுத்தி உயிரை துச்சமென உண்ணநோம்பு இருந்த தலைவர்களின் உரிமை பேச்சுகள் தெறிக்கும் மாநாடு*

*கமிட்டி என்று நீட்டித்து நேரத்தையும் காலத்தையும் விரையம் செய்து நம் உரிமை கோரிக்கையான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை வழங்கிட மறுக்கும் அதிகாரவர்க்கம்.*

*முரண்பாடுகளோடு கூடிய ஊதியமாற்ற ஆணையை கையெழுத்து இட்ட அதிகாரவர்க்கத்திற்கு 2016ல் இருந்து நிலுவை ஊதியம். ஆனால் உழைக்கும்வர்க்கம் நமக்கு உழைப்பு சுரண்டலாக 21 மாத நிலுவை ஊதியம் வழங்க மறுக்கும் அதிரவர்க்கம்.*

*ஒரே அலுவலகத்தில் ஊழியர்களை ஊதியத்தில் வேறுபடுத்தி தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், என ஆசிரியர்கள் அரசுஊழியர்களுக்கிடையே பிரிவினை செய்து இருப்பதை உடனடியாக மாற்றி முறையான காலமுறை ஊதியத்தை பணிநிரந்தரத்தோடு வழங்க ஆணையிட மறுக்கும் அதிகார வர்க்கம்.*

*ஊதியமாற்றம் என்று சொல்லி முரண்பாடுகளை அதிகம் நூழைத்து அதிலும் கூட இடைநிலை ஆசிரியர்களுக்கு சரியான ஊதியமாற்றத்தை மறுக்கின்ற அவலநிலையில் அதிகார வர்க்கம்*

*அரசு வேலை கனவோடு காத்து இருக்கும் இளைஞர்களுக்கு வேலை எல்லாம் இல்லை என்றும், ஆட்குறைப்பு செய்வோம் என்றும், வெளியிடப்பட்ட அரசுஆணை 56,100,101 ஜ ரத்து செய்ய மறுக்கும் அதிகார வர்க்கம்.*

*இதுபோன்று நம் நியாயமான கோரிக்கையை முன்நிறுத்தி இயக்கங்கள் பல கண்டுவிட்டோம். ஆனால் அரசும் ,அதிகாரவர்க்கமும் உழைக்கும் வர்க்க உரிமைகளை தட்டி பறிக்கும் சூழ்நிலையை இனி ஒருகணமும் அனுமதிக்கமாட்டோம் அதற்காகதான் சேலத்தில் ஒன்றுப்பட்டு நிற்கபோகிறோம் 13.10.2018ம் தேதி வேலை நிறுத்த ஆய்த்த மாநாட்டிலே.*

*அசையாத நிர்வாகத்தை அசையவைக்க ஒரணியில் திரண்டு நவம்பர்27 ல் புதிய அத்தியாயம் படைக்கும் காலவரையற்ற வேலை நிறுத்ததை அறிவிக்க போகும் மாநாடு.*

*தோழர்களே நம்உரிமைகளை நாம் தான் பெறவேண்டும். நாம் தான் களத்தை அக்னி பிளம்பாக , அனல்காற்றாக, கடல் சிற்றமாக, சூறாவளி காற்றாக, ஊழியர்களை கோபத்தோடு ஒருங்கிளைத்து சேலத்தில் நம் எடுக்கும் நிலையான முடிவுகள் அரசுக்கு அச்சத்தை உண்டு பண்ணும் விதமாக மாநாட்டி பங்கற்க வேண்டும் தோழர்களே.*

*அதிகாரவர்க்கம் தர மறுக்கும் நம் கோரிக்கையை அரசு ஆணையாக அதிகாரவர்க்க முரட்டு கரங்களில் இருந்து தட்டி பறிக்க வேண்டும். ஒற்றுமையே கட்டுவோம். உணர்வோடு பங்கேற்போம் .*

*மீண்டும் ஒர் நினைவூட்டல்….*

*வருகிற 13.10.2018ம் தேதி மதியம் 1 மணிக்கு சேலம் ஜவஹர் மில் எதிரில் அமைந்துள்ள வரலட்சுமி திருமண மாஹலில் மிக உற்சாகமாக துவங்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமை பெற்று தர போகும் வேலை நிறுத்த ஆய்த்த மாநாட்டில் 100% உணர்வுபூர்வமாக பங்கேற்போம். வெற்றி காண்போம்*

*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*
*ஜாக்டோ ஜியோ*
*கோவை*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here