👍👍👍வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி கட்டிடம் பெற வழிவகை செய்த பெற்றோர் மற்றும் மாணவர்கள்👏👏👏

பைத்தந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டிட வசதி வேண்டி இன்று (12.10.18) காலை பெற்றோர் மற்றும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), வட்டார கல்வி அலுவலர்கள் (BEO), கிராம நிர்வாக அலுவலர் (VAO), காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக கட்டிட வசதி ஏற்படுத்தி தருகிறோம் என உத்திரவாதம் அளித்ததால் பெற்றோர்கள் அதனை ஏற்று மாணவர்களை வகுப்பிற்குள் விட்டுச் சென்றனர். பிறகு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தல் செயலை மேற்கொண்டனர்.


இவ்வாறாக எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடமளிக்காமல் அமைதியான வழியில் தங்களது குழந்தைகளின் கல்வி நலனுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பெற்றோர்கள் போராடிய விதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது 👏👏👏👏👏👏👏👏👏

இந்த நிகழ்வினை நல்லதொரு முறையில் கையாண்ட BDO, BEO, VAO, Teachers, Police, Reporters and Villagers அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏

பள்ளியின் ஐந்து வருட பிரச்சனைக்கு தீர்வு காண பிரமாண்டமாக போராடிய பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here