பேச்சுப்போட்டிக்கு ரூ.2 லட்சம் பரிசு அக்.22க்குள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசு இளைஞர் நலன்

மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில் வரும் குடியரசு தினவிழாவையொட்டி”நாட்டுப்பற்று மற்றும் தேசிய நிர்மானம்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடக்கவுள்ளது.

மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000 , 2ம் பரிசு ரூ.2000, 3ம் பரிசு ரூ.1000 வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசு ரூ.2 லட்சம், 2ம் பரிசு ரூ.1 லட்சம், 3ம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.18 முதல் 29 வயதுள்ள ஆண், பெண்கள் அக்.22ல் அந்தந்த வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம்.
வட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோர் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோர் மாநில அளவிலும், மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் பேச்சுப் போட்டி நடைபெறும். பங்கேற்க விரும்புவோர் துணை இயக்குனர், நேரு யுவகேந்திரா, 1/372 பாரதி நகர், ராமநாதபுரம் என்ற முகவரியிலோ அல்லது 95855 35722 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் சடாச்சரவேல் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here