நாட்டில் உள்ள 137 ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாட்டில் ராணுவப் பயிற்சி மையங்கள் உள்ள இடங்களில் 137 ராணுவப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் என 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ராணுவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதுநிலைப் படிப்பு மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தால் விண்ணப்பிக்கலாம். 

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிபிஎஸ்இ பள்ளிகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். பணி அனுபவம் அதிகம் உள்ளவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பித்த பிறகு தகுதிகளை சோதித்த பிறகு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளம் வழியாக 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இதற்கான தேர்வு முறைகள் நவம்பர் 17, 18ம் தேதிகளில் நடக்கும். இது தொடர்பாக கூடுதல் விவரம் வேண்டுவோர் http://aps-csb.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here