சமூகத்தில் உள்ள அனைத்து அங்கங்களும் நேர்மையாக இருந்தால் மட்டுமே நேர்மையான நிர்வாகத்தை தர முடியும்: ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேச்சு..

காரைக்குடி,அக்.8: வீறுகவியரசர் முடியரசன் அவைக்களத்தின் சார்பில் முப்பெரும் விழா காரைக்குடி கோல்டன் சிங்கார் மகாலில் நடைபெற்றது..

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் முனைவர் சே.செந்தமிழ்ப் பாவை வரவேற்றுப் பேசினார்..முனைவர் சேது.குமணன்,செ.கொங்குவேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..எழுத்தாளர் பாரி முடியரசன் அறிமுகவுரையாற்றினார்.புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப் பித்தன் தொடக்கவுரையாற்றினார்.

வீறுகவியரசர் முடியரசனார் விருதுகள்,பரிசுகள்,அவைக்களப் பாராட்டு பட்டயங்கள்,அவைக்கள நன்றி நல்கை விருது வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம்
பேசியதாவது: என்னை எல்லோரும் என் தகுதிக்கு மீறி பாராட்டுகிறார்கள்..நேர்மைப் போராளி,இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் என்றெல்லாம்..ஆனால் நான் பெருமையாக நினைப்பது மக்கள் நலன் நாடிய மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பதையும் தமிழனாக இருப்பதையும் தான்..நான் பெரும்பாலும் அரசுப் பள்ளி விழாக்களுக்கு தான் செல்வேன்..அவர்களோடு தான் கலந்துரையாடல் செய்வேன்..காரணம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் தான் நம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள் என்பதால்..ஆனால் இன்று அதிக குழந்தைகள் ஆங்கில வழிக் கல்விக்கு செல்வதை வருத்தத்தோடு பார்க்கிறேன் ..மேலும் இங்கு வந்துள்ள அனைவரும் தமிழில் தம் பிள்ளைகளுக்கு பெயர் வையுங்கள்.. குழந்தைகளிடம் ஆங்கிலம் தவிர்த்து அழகிய தமிழில் பேச கற்றுக்கொடுங்கள்.இந்த தேசத்தின் ஆட்சி மொழியாக எதை வைக்க வேண்டும் என என்னிடம் ஐ.ஏ.எஸ் நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்ட பொழுது கொஞ்சம் கூட தயங்காமல் பழம்பெருமைஉடைய என் தாய்மொழி தமிழை வையுங்கள் என்றேன்.அந்தளவுக்கு தாய்மொழி தமிழ் மீது பற்று கொண்டவன் நான்..அரசியல் தலைவர்கள்,மற்றும் நிர்வாகம் சரியாக இருந்தால் போதாது..சமூகத்தில் உள்ள அனைத்து அங்கங்களும் நேர்மையாக இருந்தால் மட்டுமே நேர்மையான நிர்வாகத்தை தரமுடியும்.எனவே நேர்மையை முதலில் சமூகத்தில் இருந்து தொடங்க வேண்டும்..எல்லோரும் என்னிடம் இடர்மிகு தளத்தில் எப்படி ஜெயிக்க முடிகிறது என்று ..போட்டியில்லாத இடம் இந்த நேர்மையான தளம்..நான் நேர்மையான தளத்தில் செல்வதால் என்னால் வெற்றி அடைய முடிகிறது என்றார்..

அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா வாழ்த்துரை வழங்கினார்..முடியரசனாரின் பூங்கொடிப் புரட்சி பற்றி அ.சபரிமாலா சிறப்புரையாற்றினார்..முனைவர் தமிழ்முடியரசன் தொகுத்து வழங்கினார் ..

விழாவில் வீறுகவியரசர் முடியரசனார் விருது புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன்,முனைவர் நாவை.சிவம்,கவிஞர் முத்தரசன்,கவிஞர் இனியன் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.

வீறுகவியரசர் முடியரசனார் நல்லாசியர் விருது நல்லாசிரியர் மா.சீ.இராசபாண்டியனுக்கும்,வீறுகவியரசர் முடியரசனார் புரட்சிப் பூங்கொடி விருது சந்தனமேரிக்கும் ,வீறுகவியரசன் முடியரசன் நேர்மைப் போராளி விருது ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயத்துக்கும்,செயற் செம்மல் பட்டம் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையாவுக்கும் வழங்கப்பட்டது.மேலும் வீறுகவியரசர் அவைக்களப் பாராட்டுப் பட்டயம் கரு.பேச்சிமுத்து- இராக்கம்மாள்,ச.மீ.இராசக்குமார் ஆகியோருக்கும் ,வீறுகவியரசர் அவைக்கள நன்றி நல்கை விருது காரைக்குடி அரிமாசங்கம்,முன்னாள் காரைக்குடி நகர் மன்ற உறுப்பினர் கு.ஞானப்பிரகாசம் ,பி.வி.கட்டுமான நிறுவனர் ச.மை.பாக்கியராசு,பதினெண் சித்தர் கல்விக் கூட தலைவர் முத்துராசமூரத்தி,கூடல் தலைவர் அ.புட்பலதா,தமிழாசிரியர் இரா.முருகேசுவரி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது..

முன்னதாக தேவகோட்டை தே பிரித்து மேல்நிலைப் பள்ளியின் 1400 மாணவர்கள் தமிழ்கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்டமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம்,அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா ஆகியோரை தத்ரூபமாக வரைந்த தேபிரித்தோ பள்ளி மாணவர் ஜ.பெர்னால்டு ஜார்ஜ்ராஜ்,பட்டிமன்ற பேச்சாளர் சபரிமாலாவை வரைந்து பரிசளித்த மு.பிரகாஷ்,மற்றும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடைபெற்ற மாநில பேச்சுப் போட்டியில் முதல்பரிசுபெற்ற இரா.விஷ்வா,பள்ளிகல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விவாத மேடைபோட்டியில் மாநில முதல்பரிசுவென்ற இரா.மணிகண்டன்,ஆ.குப்பமுத்து ஆகியோரை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பரிசு வழங்கிப் பாராட்டினார்..

விழாவில் கலந்து கொண்ட பல்வேறு பள்ளிகள்,கல்லூரிகளின் மாணவர்களுக்கும் வீறுகவியரசர் முடியரசனார் பரிசு வழங்கிப் பாராட்டினர்..முடிவில் முனைவர் இரா.வனிதா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here