சமக்ர சிக்‌ஷா ஒருங்கிணைந்த பள்ளி மான்யம்2018-2019 பயன்படுத்துதல் மற்றும் வழிக்காட்டுதல் குறிப்புகள்

✅மானியம் வழங்குவதன் நோக்கம்*

✔2018 – 19 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்

கல்வி திட்டத்தின்கீழ்(Samagra Shiksha) அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கேற்றவாறு தேவையான வசதிகளை
மேம்படுத்த ஒருங்கிணைந்த பள்ளி மான்யம்(Composite School Grant)
அனுமதிக்கப்பட்டுள்ளது.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
✅ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை சட்ட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள
நிதி நெறிகள் மற்றும் திட்ட விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*1⃣.SWACHHTA ACTION PLAN*
*2018 – 19*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

✅SWACHHTA ACTION PLAN 2018 – 19 (SAP) முழு சுகாதார தமிழகம் என்ற
தலைப்பின் கீழ் பயன்படுத்துவதற்காக 10 சதவீத தொகைக்கு அனுமதி
வழங்கப்படுகிறது.

1. மாணவர்களின் எண்ணிக்கை – 15 – 100 எனில் மான்யத் தொகை ரூ.25000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை
ரூ.2,500/.

2மாணவர்களின் எண்ணிக்கை – 101 – 250 எனில் மான்யத் தொகை ரூ. 50000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை ரூ.
5,000/.

3.மாணவர்களின் எண்ணிக்கை – 251 – 1000 எனில் மான்யத் தொகை ரூ. 75,000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை ரூ.
7,500/-

4.மாணவர்களின் எண்ணிக்கை – 1000 க்கு மேல் எனில் மான்யத் தொகை ரூ.
1,00,000/- இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும்
தொகை ரூ. 10,000/-
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*2⃣.கழிவறை பராமரிப்பு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருக்கும்
வகையில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு மாணவர்கள்
பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

2.கழிப்பறையின் உட்புறம் பேசின் பொருத்துதல், கதவு மற்றும்
வெண்டிலேட்டர், தரைப் பூச்சு வேலை, தண்ணீர்  வசதிக்கான குழாய்கள், தரை
ஒடுகள், செப்டிங் டாங்க் பழுது பார்த்தல் முதலிய பணிகள் மேற்கொள்ளலாம்.

3.கழிவுநீர் வெளியேறும் குழாய் இணைப்புகள் பழுது பார்த்தல்.

4.கழுப்பறைகளை சுத்தம் செய்யத் தேவையான (Bleaching powder, Phenol,
etc…) பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

5.கழிவுநீர்த் தொட்டி (Septic tank) சுத்தம் செய்தல்.

6.பள்ளி வளாகத்தில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளிலும் கட்டாயம் கை
கழுவ வசதியாக (Hand Washing Facility) குழாய் அமைத்திடவும் மற்றும்
அதற்கான பொருட்கள் (Wash Basin, Soap, etc..) வைத்திடவும் வேண்டும்.

7.பழுது மற்றும் பராமரிப்புப் பணி செய்யப்பட்ட கழிவறை கட்டடங்களுக்கு
வெள்ளை மற்றும் வர்ணம் அடிக்கப்பட்டு(White and Colour washing) அத்தகவலை
கழிவறை சுவற்றில் எழுதி வைத்திட வேண்டும். (ஆண்கள்/பெண்கள்/பொதுக் கழிவறை
2018 – 19 ஆம் ஆண்டு நிதியிலிருந்து பணி செய்யப்பட்டது).

8. பொதுக் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நுழைவு
வாயிலில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*3⃣.குடிநீர் வசதி*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. அனைத்துப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதியினை
மேம்பாடு செய்து தொடர்ந்து தண்ணீர் வசதி கிடைக்கும் வகையில் பராமரிப்புப்
பணி மேற்கொள்ள வேண்டும்.

2.மோட்டார், தண்ணீர் வசதிக்கான குழாய்கள், தரைமட்டத் தொட்டி, மேல்நிலை
நீர் தேக்கத் தொட்டி போன்றவற்றை பழுது பார்த்தல்.

3.மொத்தப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான போதுமான எண்ணிக்கையில்
குழாய்(TAP) வசதி செய்யப்பட வேண்டும்.

4.கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியினைச் சுற்றியுள்ள இடங்களிலுள்ள
முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து பள்ளி வளாகத்தினை தூய்மையாக
வைத்திருக்க வேண்டும்.

5.மாணவர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து கொள்ளலாம்.

6.தரைமட்டத் தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, கழிவு நீர்த்
தொட்டி(Septic tank) ஆகிய தொட்டிகளுக்கு மேல்மூடி இல்லாத நிலையில்
உடனடியாக மூடி அமைத்திட வேண்டும்.

7.அனைத்துக் கழிவறைகளிலும் கண்டிப்பாக தண்ணீர் இணைப்புடன் கூடிய குழாய்
பொருத்த வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*4⃣.கற்றல் – கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.தொடக்க மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1 – 3 வகுப்புகளில் உள்ள
மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றல் முறையின் புதிய
அணுகுமுறை மூலம் கல்வி கற்பதற்கேற்றவாறு கற்றல் – கற்பித்தலுக்குத்
தேவையான எழுதுபொருட்கள், அமர்வதற்கான பாய்கள்/நாற்காலிகள், கீழ்மட்ட
கரும்பலகை, கம்பிப்பந்தல், சுய வருகைப் பதிவேடு, ஆரோக்கிய சக்கரம், CCE
பதிவேடுகள், கரும்பலகைக்கு வண்ணம் தீட்டுதல், அடிப்படை வசதிகளை
மேம்படுத்த மேஜை, நாற்காலி, பீரோ, சுவர் கடிகாரம், மின் சாதனப்பொருட்களான
மின்விசிறி, மின் விளக்குகள், ஒலி பெருக்கி(மைக்) போன்றவற்றை வாங்க
பயன்படுத்தலாம்.

2.மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட கற்றல் – கற்பித்தல்
செயல்பாடுகளுக்கு பயன்படுத்து கொள்ளலாம்.

3.மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த மாணவர்களின் பயன்பாட்டிற்காக
பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ் பள்ளி
மேலாண்மைக் குழு மூலம் வாங்கிப் பயன்படுத்தலாம்.

4.அறிவியல் ஆய்வகத்திற்கான தேவையான ஆய்வகப் பொருட்கள், உலக உருண்டை,
நிலப்படத் தொகுதி, தனிம வரிசை அட்டவணை போன்றவற்றை வாங்க முன்னுரிமை
அடிப்படையில் பயன்படுத்தலாம்.

5.மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்
கைபந்து, கால்பந்து, ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்கப் பலகை(Chess Board),
கேரம் விளையாட்டு(Carrom Board) போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்க
பயன்படுத்தலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*5⃣.கணினி வழிக் கற்றல் (CAL Centre)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. இக்கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தங்கள் மூலம்
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பத்தை கைக்கொண்டு
பயில்வதற்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்கனவே அனைவருக்கும் கல்வி
இயக்கத்தின் மூலம் கணினி வழி கல்வி திட்டத்தின்கீழ்(CAL Centrer)
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்திரவாத காலம் முடிந்த நிலையில்
பயன்பாடின்றி உள்ள கணினிகள் மற்றும் பழுதடைந்துள்ள பள்ளி உபகரணங்களைப்
பழுது நீக்கம் செய்திடவும், இயங்காக நிலையில் உள்ள பழுதுப் பொருட்களுக்கு
மாற்றாக புதிய உபகரணங்களை மாணவர்களுக்கு பயனுடையதாக வாங்கி கொள்ளவும்
பயன்படுத்தலாம்.

2.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் செயல்படும் கணினிவழிக் கல்வித்
திட்டம் நடைபெறும் பள்ளிகளுக்கு இணையதள வசதி தேவைப்படின் வருடத்திற்கு
அதிகபட்சமாக ரூ.2000 பயன்படுத்துக் கொள்ளலாம்.

3.மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் நிகழ்வைப் புதுமையான முறையில்
வழங்குவதற்கு ஏதுவாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு
பழுதடைந்துள்ள நிலையில் உள்ள (Audio/Visual Aids) LCD Projector, Screen,
TV, DVD உள்ளிட்ட பொருட்களை பழுது நீக்கம் செய்ய பயன்படுத்தலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*6⃣.மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் பள்ளிப் பாதுகாப்பு.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைக் கட்டடங்களிலும் கட்டாயம்
கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும்.(To achieve 100%
barrier free access (RTE) Act,2009)

2.மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும்
அனைத்துக் கழிப்பறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிப்பறை அலகு மாற்றுத்
திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக கைப்பிடிகள், தரை ஒடுகள், கழிப்பறை
கோப்பைகள் மற்றும் விவரப் பலகைகள் அல்லது குறியீடுகள் அமைக்க
பயன்படுத்தலாம்.

3.பள்ளி வளாகத்தில் பாதுகாப்பில்லாத மின் இணைப்புகள், கட்டுமானங்கள்,
மரங்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றினை அகற்றிடவும் மாணவர்கள்
பாதுகாப்புடன் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*🔴பள்ளி மேலாண்மைக் குழு (SMC)*
1.ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் (வ.எண், பெற்ற தொகை, வங்கி
பெயர் மற்றும் நாள்) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.

2.மேற்காணும் இனங்களில் தேவையான பொருட்களை வங்குவதற்கு அவசியமான
பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும்.
பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி
தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும்.

3.ஒரு செலவீனம் ரூ.5000/- க்கு மேல் இருந்தால் அத்தகைய செலவினத்திற்கு
கண்டிப்பாக மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டு
“Quotation” அவற்றில் குறைவான விலைப்புள்ளி வழங்கிய நிறுவனத்திடமிருந்து
பொருட்கள் வாங்கப்பட வேண்டும்.

4.நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை
கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியரால் கையொப்பமிட வேண்டும்.

5.ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின்போது
அப்பள்ளிக்கு வழங்கப்படுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம்
மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு
செய்வதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ரொக்க
பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்
குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும்.

6.அனைத்து  பள்ளிகளிலிருந்து கூடிய வரையில் டிசம்பர் மாதம் முதல் ரொக்க
பதிவேடு, பற்றுச்சீட்டுகள், இருப்புப் பதிவேடு மற்றும் பொருட்களின்
உண்மைத் தன்மை ஆகியவற்றை பார்வையிட்ட பின்னரே பயன்பாட்டுச் சான்றிதழை
தலைமையாசிரியர் கையொப்பமுடன் ஆசிரியர் பயிற்றுநர்கள் பெறுதல் வேண்டும்.

7.பயன்படுத்தாத மீதமுள்ள தொகையினை 31.03.2019 க்குள் மாவட்ட திட்ட
அலுவலக கணக்கிற்கு தலைமையாசிரியர்கள் வங்கி வரைவோலை / ECS மூலம்
ஒப்படைப்பு செய்தல் வேண்டும்.

8.பள்ளித் தகவல் பலகையில் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நாளதுவரை
பெறப்பட்ட விவரம் (தேதி தொகை உட்பட) பெயிண்டால் எழுதப்பட்டிருக்க
வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*🔴ஒருங்கிணைந்த பள்ளி மான்யம் பயன்படுத்தியதைக் கண்காணித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்(APO), மாவட்ட கல்வி
அலுவலர்கள்(DEO), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின்
போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும் அதற்கான பற்றுச் சீட்டுகள்,
ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றைக் கண்காணிக்க
வேண்டும்.

2.தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறனை 6,7,8 வகுப்பு மாணவர்கள் மேம்படுத்த
ஒவ்வொரு பள்ளி நாட்களிலும் தலைமையாசிரியர் (பள்ளி மேலாண்மைக் குழு
ஒப்புதலுடன்) தினசரி பத்திரிக்கைகள் வாங்கியுள்ளாரா என்பதையும்,
மாணவர்கள் வாசித்தல் திறனை பரிசோதித்தும் பள்ளிப் பார்வைக்கும் செல்லும்
அலுவலர்கள் பதிவேட்டில் குறிக்க வேண்டும்.

3.SWACHHTA ACTION PLAN 2018-19 முழு சுகாதாரத் தமிழகம் என்ற தலைப்பின்
கீழ் 10 சதவீதத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.

4.இருப்புப் பதிவேட்டையும், ரொக்க பதிவேட்டையும், பள்ளி மானியப்
பதிவேட்டையும் மற்றும் இம்மானியத்தை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ள
பொருட்களின் உண்மைத் தன்மையையும் அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.

5.தேவையின் அடிப்படையிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி
மேலாண்மைக் குழு ஓப்புதலுடன் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பதையும்,
வாங்கப்பட்டுள்ள பொருட்களின் தரத்தையும் உறுதி செய்தல் வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*🔴பொருட்கள் வாங்குதல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்களை பட்டியலிட வேண்டும்.
அவ்வாறு பட்டியலிட்ட பொருட்களை அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கி
பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்கள் மட்டுமே
வாங்கப்பட வேண்டும்.

2.தேவைப்படும் பொழுது மட்டும் பொருட்கள் வாங்க தேவைப்படும் அளவிற்கு
வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும். கூடுதலாக தொகை எடுக்கப்பட்டு
நெடுநாட்களுக்கு தலைமையாசிரியர் கையிருப்பில் வைத்திருத்தல் கூடாது.

3.பொருட்கள் வாங்கியமைக்கான பற்றுச் சீட்டுகள் (Vouchers) பெறப்பட்டு
வரிசையாக பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரு செலவீனம் ரூ.5000/- க்கு
மேல் இருந்தால் அத்தகைய பற்றுச் சீட்டுகளுக்கு Tin நம்பர்
அவசியமானதாகும்.

4.தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்கப் பதிவேட்டில்
(Cash book) பதிவு செய்ய வேண்டும். தலைமையாசிரியர் ஒவ்வொரு பதிவிலும்
தலையொப்பமிட வேண்டும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ரொக்கப் பதிவேடு
Abstract – இல் கையொப்பமிட வேண்டும்.

5.பொருட்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில் (Stock Register) பதிவு
செய்தல் வேண்டும். இருப்புப் பதிவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்பட
வேண்டும்.ஒவ்வொரு பதிவிலும் தலைமை ஆசிரியர் தலையொப்பமிப்பமிட வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*🔴பயன்பாட்டுச் சான்றிதழ்கள் ஒப்படைத்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பயன்பாட்டுச் சான்றிதழ்களை பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டார வள மைய
ஆசிரியப் பயிற்றுநர்கள் மூலமாக வட்டார வள மையத்தில் மார்ச் (31.03.2019)
மாதத்திற்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

2.பள்ளிப் பார்வையின் போது அலுவலர்களுக்கு பயன்பாட்டுச் சான்றிதழ்களை
காண்பிக்க வேண்டும்.

*மாநில திட்ட இயக்குநர்*
*சென்னை*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here