எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2,000 செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு அக். 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு

 *எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள இரண்டாயிரம் செவிலியர் 
காலிப்பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*போபால், ஜோத்பூர் ஆகிய இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தலா 600 காலிப்பணியிடங்களும், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 500 காலிப்பணியிடங்களும், ராய்ப்பூரில் 300 காலிப்பணியிடங்களும் உள்ளன. பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் பயின்ற 30 வயதுக்குட்பட்டவர்கள், வரும் 8-ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.*

*எய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான www.aiimsexams.org என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வின் வாயிலாக மட்டும் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here